பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அண்ணாவின் ஆறு கதைகள்


படை பலத்தையும் உறுதியையும் எடுத்துக் கூறினான். எந்தக் காரணம் கொண்டும் அந்தக் கலியாணம் நடைபெறாது என்பதை அவன் மனதிலே பதியும்படி செய்து, தன்னுடைய ஏற்பாட்டுக்கு அவன் இணங்கினால், பரிசு தருவதாக வாக்களித்தான். போர்வீரன், காதலின் புனிதத் தன்மையையும், அரசகுமாரனின் போர்த்திறனையும் உணர்ந்துகொண்டு, அரசகுமாரனுக்கு உதவுவதாகச் சம்மதித்தான். எதுவும் நடைபெறாதது போலவே நடந்துகொள். மணப்பந்தலுக்கு நான் வருவேன், உன்னுடைய தோழனாக இருப்பேன், நான் எது சொன்னாலும் “ஆமாம்” என்று சொல், எது செய்தாலும் “சரி” என்று கூறு. உனக்கு ஒரு ஆபத்தும் வராதபடி நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று கூறினான். இருவரும் நண்பராயினர். சதிகாரருக்கு இது தெரியாது.

கலியாணம் ஆடம்பரமாக ஆரம்பமாயிற்று. புரோகிதன் உரத்த குரலிலே சுபவேளையிலே மந்திரங்களைக் கூறத் தொடங்கினான். மணப்பெண் நெருப்பின்மீது நடப்பவள் போல நடந்துவந்து சேர்ந்தாள். மாப்பிள்ளை கெம்பீரமாக அமர்ந்திருந்தான். தங்களின் சமர்த்தை தாமே புகழ்ந்து கொண்டு மூவரும் முடிதரித்த மன்னர் போல் உட்கார்ந்தனர். மாப்பிள்ளைத் தோழனாகத் தன் காதலன் இருக்கக் கண்டதும், அரசகுமாரிக்குத் தைரியம் பிறந்தது.

“முகூர்த்த வேளை நெருங்குகிறது, நடக்கட்டுமே” என்றார் மந்திரியார். மாப்பிள்ளைத் தோழனாக மாறுவேடம் பூண்டிருந்த அரசகுமாரன். “அரசே! இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்த இந்த மூன்று உத்தமர்களுக்கும் பரிசுகள் வழங்கிய பிறகே, மாலைசூட்டப் போவதாகச் சொன்னீர்களே” என்று மணக்கோலத்திலிருந்தவனை நோக்கிக் கேட்டான். முன் ஏற்பாட்டின்படியே அவன், “ஆமாம்”! என்றான். மூவரும் திகைத்தனர். “பரிசுகளைத் தரவோ?” என்று கேட்டான் இளவரசன். “ஆமாம்” என்றான் மாப்பிள்ளை. இளவரசன் தன்