பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண லீலா

27


ஒருவர் நவநீதகிருஷ்ணன், மற்றொன்று கற்பகம். கற்பகத்தின் ஒரே மகள் தான் லீலா. அமிர்தத்தைக் கண்டு சொக்கிய பாரிஸ்டர், லீலாவைக் கலியாணம் செய்து கொள்ளும்படி தன் தமக்கை கற்பகம் வேண்டிக்கொண்டதை நிராகரித்து விட்டவன். அவ்வளவு பிரேமை கொண்டிருந்தான் அமிர்தத்திடம். அமிர்தத்திடம் கோபித்துக் கொண்டு சித்ரபுரி சென்று சோகத்திலே மூழ்கிய பாரிஸ்டருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.

சென்றேன்! கண்டேன் ! வென்றேன்!! குழல் இனிது! அதன் மகிமை பெரிது! அமிர்தம் இப்போது என் அடிமை. நான் இல்லாவிட்டால் அமிர்தம் இல்லை! இது சத்தியம், பணத்தை வாரி வாரி வீசி, அவளை ஒரு இராணி போல வைத்திருந்த பாரிஸ்டர் நவநீத கிருஷ்ணன் பிடித்தான் ஓட்டம், நான் இங்கே இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டான், நடக்குமா? மோகனத்திலே ஒரு கிருதி, பந்துவராளியிலே ஒரு பதம் வாசித்தேன், அமிர்தம், “அவரை அனுப்ப முடியாது” என்று பாரிஸ்டரின் முகத்திலே அறைந்தாள், நீட்டினான் கம்பி. காதலால் கட்டுண்டு கிடக்கிறாள் கர்வத்தைக் கண்டாங்கியாகக் கொண்டிருந்த அமிர்தம்.

இப்படிக்கு,

குழலால் காதலில் வெற்றிகண்ட கிருஷ்ணன்.

இக்கடிதத்துடன் மற்றோர் கடிதம் இணைக்கப்பட்டடிருந்தது.

அன்புள்ள நவநீத்!

என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேவலம் ஒரு குழலூதியினால் உங்கள் இன்ப வாழ்வு (???) கெட்டுவிட்டதற்காக வெட்கப்படுகிறேன். என்ன செய்வது? அவன் தங்களை அவள் வீட்டிலிருந்து விரட்டி விட்ட பெருமையை இங்கே ஓருவனுக்குக் கடிதம்