பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அண்ணாவின் ஆறு கதைகள்


எழுதினான். அது வெளியாகாதிருக்கக் கொஞ்சம் சிரமப்பட்டேன். அது என் கடமை. அவன் அதுபற்றி இங்கு கடிதம் எழுதுவானேன் என்று யோசிக்கலாம். உமது உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கள்ளியின் வீட்டிலே தங்களைத் தோற்கடித்தவன் வேறு யாருமல்ல, இங்கே எங்கள் ஜெமீனில் மந்தை மேய்த்துத் திரிந்த கிருஷ்ணன் என்பவன் தான்.

இப்படிக்கு,
லீலா.

பாரிஸ்டர் நவநீதகிருஷ்ணன் வெட்கமடைந்தான். உண்மையில் துக்கமும் கொண்டான். அக்காவுக்குத் தூதுக் கடிதம் அனுப்பினான். மறு திங்கள், பாரிஸ்டர் நவநீதகிருஷ்ணனுக்கும் லீலாவுக்கும் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. கலியாண விஷயம் வெளியானதும் உன்னால் அவரை இழந்தேன் என்று கூறி அமிர்தம் கிருஷ்ணனை விரட்டினாள் குழலால் மதியிழந்தேன் என்று கூறிக் குளறினான் கிருஷ்ணன் குழல் என்ன செய்யும்? இவனுடைய மதி குறைந்ததற்கு அதுவா காரணம்!