பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அண்ணாவின் ஆறு கதைகள்


குத்தான் சாப்பிட்டிருந்தான். இருவரும் சாய்ந்ததும் “வந்த வேலையைக் கவனிப்போம்” என்று கிளம்பினான், அன்னத்தின் அறையை நோக்கி.

அன்னம் தூங்கிக் கொண்டிருந்தாள். கதவைத் தட்டினான் காமுகன். அன்னம் யார் என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தாள், தூக்கக் கண்ணோடு. அறை வாயிற்படியிலே, புதிய முகம் கண்டு, சற்றுப் பயந்து, பிறகு அவருடன் வந்தவர் என்று தெரிந்து கொண்டு, என்ன? என்ன வேண்டும் என்று கேட்டாள்.

உல்லாச உலகிலே நன்கு பழக்கப்பட்டவன் அவன்! “என்ன வேண்டுமா? தெரியவில்லையா?” என்றான். அன்னம் தெரிந்து கொண்டாள். திகிலடைந்தாள். அதற்குள் அவன், அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டான். திமிறினாள், கூவினாள். அவளுடைய சக்தி அவனுக்குச் சுண்டைக்காய்! கூவிய வாயிலே, தன் குடி நாற்றமடிக்கும் வாயைக் குவித்தான். கட்டிலின் மீது அமளி!

ஐயோ அம்மாவை எழுப்புகிறேன். என்னை யாரென்று நினைத்தாய்? என்னைக் கலியாணம் செய்து கொடுக்கப் போகிறார்கள்.

“இப்போது நடக்கப்போவது என்னாவாம்?”

“இந்த மாதிரி தொழிலுக்கு நான் இஷ்டப்படவில்லை தெரியுமா? எங்கம்மாவுக்குத் தெரிந்தால் என்னை சும்மா விட மாட்டாள்.”

“சரிதாண்டி! அவனிடம் நான் சொல்லி விட்டேன், அவனும் ஒப்புக் கொண்டுதான் அழைத்து வந்தான் என்னை.”

“நிஜமாகவா? என்னைக் கலியாணமல்லவா செய்ய ஏற்பாடு செய்தார்கள்?”

கழுத்திலே தாலி கட்டினால் தான் கலியாணமா ? கலியாணம் செய்து கொண்டு பிறகு நடுத்தெருவிலே