13
கொள்கை மாற்றத்துக்குத் தக்கபடி வரவு செலவுத்திட்டத்தைத் திருத்தி அமைப்பது என்பது இயலாத காரியம். ஆட்சியாளரை அப்படித் திருத்தி அமைக்கச் செய்யக்கூடிய எண்ணிக்கையும் எங்களிடத்தில் இல்லை என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.
ஆகையினாலே தான் கவர்னருடைய உரையில் கொள்கை விளக்கம் இல்லாததைப்பற்றி நான் வருந்துகிறேன் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதோடு மற்றொரு உறுப்பினர் குறிப்பிட்டது போல, உண்மையிலேயே இந்த அரசாங்கத்தினருக்குப் புதுக் கொள்கைகள் எதுவும் இல்லையா? நிதி அமைச்சர் உரையில் பின்னே வரப்போகின்ற கொள்கை விளக்கம் எல்லாம் இப்போது இருந்து கொண்டிருக்கும் நலிந்துபோன கொள்கைகளின் தொடர்ச்சியாகத்தான் இருக்குமோ? என்றுகூட ஐயப்பட வேண்டியிருக்கிறது. இந்த ஐயப்பாட்டுக்குக் காரணம் என்ன இருக்கிறதென்றால் புதிய அமைச்சரவை அமைந்தவுடனே, முதல் அமைச்சர் அவர்களை நிருபர்கள் பேட்டி கண்டதாகப் பத்திரிகையில் செய்தி பார்த்தேன். முதல் அமைச்சர் அவர்களிடம் "உங்கள் கொள்கை என்ன? திட்டம் என்ன? என்று கேட்ட காலத்தில் புதிதாகக் கொள்கைகளை விளக்க வேண்டிய அவசியம் என்ன? புது மந்திரி சபையா இது? முன்பு இருந்த கட்சிதானே இன்றைக்கும் வந்திருக்கிறது. அதே கொள்கைதான். அதே திட்டங்கள்தான்" என்று சொன்னதாகச் செய்தித்தாளில் படித்தேன்.
ஆகவே வரவு செலவு திட்டத்திலும்கூட புதிதான கொள்கை விளக்கம் இருக்காதென்று தெரிந்திருக்கின்ற காரணத்தினால்தான் ஏற்கனவேயுள்ள திட்டங்களைப்பற்றியும் குறைகளைப்பற்றியும் நாங்கள் எடுத்துப் பேச வேண்டியதாயிருக்கிறது.
ஆனால் நாங்கள் குறை கூறுவதைப் பற்றி ஆளும் கட்சியில் உள்ள பலர் குறை கூறினார்கள். முடிவில் எங்களைக் குறை கூறினவர்களும் நிர்வாகத்திலுள்ள, குறைகளையே எடுத்துச் சொன்னார்கள். இதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்றால் "பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லை போ" எனச் சொல்லிவிரட்டிய தன் நாட்டுப்பெண்ணைப் பார்த்து "அப்படிச் சொல்ல உனக்கு என்ன அதிகாரம்?" எனக் கேட்ட கொடுமைக்கார மாமியார், பிச்சைக்காரனை திரும்பவும் அழைத்து, " நான் சொல்லுகிறேன், பிச்சை இல்லை போ" என்று சொல்லித் துரத்தினதைப் போல இருந்தது. (சிரிப்பு.) பெரும்பாலும் ஆட்சியாளரின் கட்-
2