19
பதத்திற்காகச் சற்று மன்னிக்க வேண்டும், மத்திய சர்க்காருடைய பாவாடை - நாடாவில் மாகாண சர்க்கார் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கிறது என்று கருத்துப்பட அவர் சொன்னார். அந்த நாடாவைச் சற்று அவிழ்த்துவிட நாங்கள் விரும்புகிறோம். வேறு ஒன்றுமில்லை அப்படி அவிழ்த்து விட்டால் பலவற்றாலும் ஆற்றல் படைத்த அமைச்சர்கள் அமைந்திருக்கும் இந்த அமைச்சர் அவை உண்மையிலேயே நல்ல காரியங்கள் ஆற்றும் என்ற நம்பிக்கையால் நாங்கள் சொல்லுகிறோமே தவிர, ஆட்சிப் பொறுப்பிலிருந்து அவர்களை விரட்ட வேண்டும் என்பதால் அல்ல.
குறை சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் அல்ல. நம் ஜனநாயகத்தில் இருக்கின்ற ஒரு சிறு தத்துவத்தை மிகக் குறைந்த நேரத்தில் விளக்கப் பிரியப்படுகிறேன். கனம் அங்கத்தினர் தம்முடைய கருத்துரைகளை எடுத்துச்சொல்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படாதது பற்றி உண்மையிலேயே வருத்தப்பட்டார். ஆனால், அதற்குக் காரணம் புதிதாக வந்திருக்கும் உறுப்பினர்கள் எங்கெங்கேயோ அலைந்துவிட்டுப் பிறகுதான் தங்களுடைய விஷயத்துக்கு வருவார்கள் என்பது மட்டுமல்ல உறுப்பினர்கள் எவ்வளவு காலம் அநுபவம் பெற்றாலும், இப்பொழுதிருக்கும் முறைப்படி, எந்த அங்கத்தினரும் தம்முடைய கருத்துக்களை விரிவான முறையில் எடுத்துச் சொல்வதற்குச் சட்ட மன்றத்திலே உண்மையிலேயே வாய்ப்பு இல்லை, வசதியும் இல்லை, என்று நான் கருதுகிறேன். அதற்காக ஜனநாயகத்தில். உண்மையிலேயே ஒரு சிறந்த சட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், நமக்குள்ளேயே ஒரு ஏற்பாட்டினைச் செய்துகொண்டால், சாலச் சிறப்புடையதாகும் என்று நான் கருதுகிறேன்.
ஒவ்வொரு துறையிலும் விவாதங்கள் செய்கின்ற நேரத்தில் அந்தந்த துறைக்குப் பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களில் ஆளும் கட்சியிலிருந்தும் எதிர்க் கட்சியிலிருந்தும் பதின்மர், இருபதின்மர்; பதினைந்துபேர்கள், பன்னிரண்டுபேர்கள் கொண்ட சிறு சிறு ஆலோசனைக் குழுக்களை வைத்துக்கொண்டால் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு தலைப்பிலே வருகிற விஷயங்களை அந்த ஆலோசனை குழுவிலே உண்மையிலே நன்றாக விவாதிக்கலாம். அப்படி விவாதிக்கும்போது உண்மையிலேயே பேச்சுப்போட்டிபோல் அமையாமல் கொள்-