உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கையை விளக்குகின்ற அளவிலே இந்தச் சட்ட மன்றம் அமையும் என்று நான் கருதுகிறேன். இதற்கு ஆளும் கட்சியினர் ஏதாவது வழி செய்வார்களானால்.—எனக்கு அல்ல—ஜனநாயகத்திற்கு உண்மையிலேயே சேவை செய்தவர்களாவார்கள்.

"வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது" என்பதை அடுக்குச் சொல்லாக சொல்லப்படுவது என்று கருதிக்கொண்டு. அடுக்குச்சொல் எப்படி இருக்கக்கூடாதோ அந்த முறையில் "குண்டா இருக்கிறது. அண்டா இல்லை; கோச் இருக்கிறது, மாச் இல்லை" என்று சொன்னது, அடுக்குமொழி சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும், அடுக்கு மொழி தவறான இடத்தில் கிடைத்துவிட்டால், எவ்வளவு அலங்கோலமாகின்றது என்பதையும் காட்டுகிறது.

"வடக்கு வாழ்கிறது. தெற்குக் தேய்கிறது" என்பதை அடுக்குச் சொல்லில் சொல்வதால் மட்டும் ஒரு சிறு கூட்டத்தார், நாட்டிலே அந்த மனப்பான்மையை ஏற்படுத்திவிட முடியாது. எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் அதற்குத் தேவையான புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே நமக்கு அடிக்கடி கிடைத்துக்கொண்டு வருகின்றன. அப்படிக் கிடைத்துக்கொண்டு வருகின்ற சில புள்ளி விவரங்களில் ஒரே வகை ஆலைத்தொழிலில் ஈடுபட்டவர்களுடைய குடும்பங்கள் இரண்டை எடுத்து ஒன்று வடநாட்டில்; மற்றொன்று தென்னாட்டில்-ஒப்பிட்டுப் பார்த்தால் வடநாட்டில் உள்ளவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 273-ம் தென்னாட்டில் உள்ளவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.93-ம் வருமானம் கிடைக்கிறது என்று சர்க்காருடைய புள்ளி விவரக்கணக்கு நமக்கு அறிவிக்கிறது.

அதைப்போல, விவசாயத் துறையிலும் சரி, அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தைக் கவனித்தாலும் சரி, வேலை நாட்களை கவனித்தாலும் சரி, வடக்கில் இருப்பவர்களுக்கும் தெற்கில் இருப்பவர்களுக்கும் உள்ள தாரதம்மியத்தை அடிக்கடி சர்க்காருடைய புள்ளி விவரங்கள் நமக்கு தெள்ளத்தெளிய எடுத்துக் காட்டுகிறது. இவைகளைப் போக்குவதற்கு எங்களைக் கருவிகளாகப் பயன் படுத்திக் கொள்வார்களானால் உண்மையிலேயே நாங்கள் மெத்த மகிழ்ச்சி அடைவோம்.

பட்டாளத்தில் " Sappers and Miners" பிரிவினர்கள் கள்ளிக் காளான்களை அகற்றி பாதைகளை சரி செய்துவைத்தால்,