உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கவனிக்கப்படவில்லை. எங்களுடைய தொகுதி கவனிக்கப்படுமா என்று தெரிய வேண்டும் என்று ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களில் பலரும் கேட்டார்கள். நான் பிறஉறுப்பினர்களைப்பற்றி கவலைப்படவில்லை. காங்கிரஸ்காரர்களே இந்தத் திண்டாட்டம் அடைகின்றபொழுது மற்றவர்களுடைய நிலைமையைப் பற்றி கூறவே வேண்டாம். கனம் அங்கத்தினர் அம்மையார் ஒருவர் கூறினார் "எந்தெந்த மந்திரிகளையெல்லாமோ அழைத்து வந்து எங்களது குறைகளை எடுத்துச் சொன்னோம். கடைசியில் கனம் மந்திரி கக்கன் அவர்களை கூட அழைத்துவந்து எங்கள் குறைகளை சொன்னோம். அவைகளுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. எங்களது துன்பக் கண்ணீர் துடைக்கப்படவில்லை" யென்றும் அம்மையார் அவர்கள் கசிந்துருகிக் கண்ணீர்விட்டார்கள் ஏழைகளாகிய நாங்கள், எதிர்க் கட்சியிலுள்ளவர்களாகிய நாங்கள், 'இதுவும் ஒரு கட்சியா'? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று நீங்கள் நினைக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நல்ல சீர்திருத்தங்கள் எல்லாம் கொண்டுவந்த பிறகும், நல்ல நல்ல திட்டங்கள் எல்லாம் கொண்டுவந்த பிறகும், இவைகள் இத்தனை மோசமாக இருப்பதற்குக் காரணம் என்னவென்று என் பேதை நெஞ்சம் எண்ணத் துணிகின்றது. மற்றொரு அம்சம், விவசாயிகளுக்கு அறுபது நாற்பது சட்டம் வந்த பிறகு அதனால் நிலச்சுவான்தார்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதின் நிலைமைகளைப்பற்றி பல அங்கத்தினர்கள் எடுத்து காட்டினார்கள். சட்டங்களை நிறைவேற்றனால் மாத்திரம் போதாது. இதை நடத்துகின்ற நிர்வாக இயந்திரம் பழுது ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல இடங்களில் நிர்வாக இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்டார்கள். மட ஆலயங்களில் உள்ள ஏராளமான நிலங்கள் உழவர்களுக்கு தரப்பட வேண்டும், என்று அரசாங்கத்தை கவனப்படுத்துகின்ற வகையில் பல அங்கத்தினர்கள் குறிப்பிட்டார்கள். இவைகளை எல்லாம் பார்க்கும்போது, ‘ஐயோ! இவர்கள் எல்லாம் நம் பக்கத்தில் இருக்கவேண்டியவர்கள். தேர்தலில் பிரிந்து போய்விட்டார்களே’ என்று எண்ணக்கூடிய நிலையில் இருக்கிறது. (சிரிப்பு.) இவை தவிர ஆஸ்பத்திரிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கிராமக்களுக்குச் சரியான பாதை போக்குவரத்து செய்து கொடுக்கப்படவில்லை, மின்சார கெடுபடி அதிகமாக இருக்கிறது, இலங்கையிலிருந்து ஏற்படுகின்ற கஷ்டங்கள், இவைகளுக்கு எல்லாம் நிவா-