உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'அண்ணா' வின்
சட்டசபைச் சொற்பொழிவுகள்



30—4 — 57]

[செவ்வாய்க்கிழமை

[சபாநாயகரும் (டாக்டர் U. கிருஷ்ணாராவ்) உதவி சபாநாயகரும் (திரு. B. பக்தவத்ஸல நாயுடு) தேர்ந்தெடுக்கப்பட்ட போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்திப் பேசியது]


பிற்பகல் 12-30

சட்டமன்றத் தலைவர் அவர்களே, துணைத்தலைவர் அவர்களே,

தங்களுடைய கட்டளைக்கு, அடங்கி நல்ல முறையில் தங்களுடன் ஒத்துழைத்து இந்தச்சபையின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதில் இந்தப் பகுதியில் அமர்ந்திருக்கிற எங்களுக்கு உண்மையில் நல்ல நம்பிக்கையும், இதிலே பிறருக்கு நம்பிக்கை ஏற்படச் செய்ய வேண்டுமென்ற உறுதிப்பாடும் இருப்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களுடைய சிறந்த அறிவாற்றலை நான் மாணவனாய் இருந்த பருவத்திலும், அரசியல் நடவடிக்கைகளை கவனித்துப் பார்த்த காலத்திலும் இருந்தே நன்கு அறிந்திருக்கிறேன். தங்களைப் போன்ற நேர்மை உள்ளம் படைத்தவர்கள் போட்டியின்றியே சபைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது தான் பொருத்தமானது. என்றாலும், ஜனநாயக அமைப்பிலே சில பல தவிர்க்கமுடியாத கடமைகளுக்கு உட்பட்டு போட்டி இருந்தது என்றும் அந்தப் போட்டியும் தங்கள் புகழை அதிகப்படுத்துவதாக முடிந்தது என்பதையும் அறிவோம்.

பாராளுமன்ற நடவடிக்கைகளில் தங்களுடைய அறிவையும், ஆற்றலையும் நன்கு அறிந்திருக்கக் கூடிய எங்களுக்கு அதிலே அதிகமான அனுபவம் இல்லாததை தாங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று குறிப்பிட விரும்புகிறேன். அரசியல் துறையில் தாங்கள் நல்ல அறிவாற்றல் பெற்றிருப்பதுபோலவே தாங்கள் ஈடுபட்டிருக்கிற மருத்துவத் துறையில் யார் யார் தங்களிடம்