6
இளைத்து வருகிறார்களோ அவர்களுக்குப் பலமூட்டுகின்ற காரியத்தில் நீண்டநாளாக ஈடுபட்டிருக்கிறீர்கள். உடல் இளைத்தோருக்கு மருத்துவராக அவர்கள் பக்கத்தில் நின்று தாங்கள் பலம் ஊட்டுவதைப் போலவே அரசியலில் இளைத்தோருக்குப் பக்கத்திலும் தாங்கள் நின்று பலமூட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் உலகத்தில், நம் நாட்டு ஜனநாயக ஆட்சியில் என் போன்றவர்களுக்கு இத்தகைய சட்டமன்றத்தில் அநுபவம் இல்லாதது மட்டுமல்ல பொதுவாக பிற ஜனநாயக நாடுகளோடு, ஜனநாயக முறையில் செயல்படுகிற நம்முடைய நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சிறு குழந்தைப் பருவத்தில்தான் உள்ளது என்பதை நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோம். இந்த நிலையில் நல்ல ஜனநாயகப் பண்புடன் வளர்ந்திருக்கும் தாங்கள், இந்த பக்கத்திலுள்ள எங்களில் சிலர் யாராவது சில சமயங்களில் கொஞ்சம் குறும்பாக குழந்தைத்தனமாக நடந்துகொண்டாலும். தாய்போன்று எங்களை அன்புடன் அணைத்து அதிகமாக அடிக்காமல், கருணையோடு சீராட்டி வளர்ப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில் அரசியல் அநுபவம் உள்ளவர்கள், அரசியல் அநுபவம் இல்லாதவர்கள் என்ற இரண்டு வகைமட்டுமல்ல, இதையே பச்சைத் தமிழில் சொன்னால் ஞானவான்கள், அஞ்ஞானம் நிரம்பியவர்கள் என்ற இரண்டு வகைமட்டும் அல்ல, ஞான சூனியர்கள் இருப்பதாகவும் கருதப்பட்டு வருகிறது. எங்கள் போன்றவர்களை ஞானசூன்யர்கள் என்றால் கவலை இல்லை. ஞானசூன்யர்களைத் திருத்த முடியும். ஞானவான்களாக்கமுடியும். ஆனால் அஞ்ஞானிகளை திருத்துவது என்பது மிகமிகக் கடினம்.
என்னைப் பொறுத்த வரையில், நாங்கள் சேர்ந்திருக்கிற இந்தப் பகுதியைப் பொறுத்தவரையில், அரசியல் அநுபவத்தையும் ஆற்றலையும் அதிகமாகப் பெற்றுவிட்டோம் என்று எடுத்துச் சொல்வதற்கு இல்லை. ஆனால் நம் நாட்டில் ஜனநாயகம் குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே நாங்கள் அதிகமாகப் பயிற்சிபெறாமல் இருப்பது அதற்கு ஏற்றகாலத்தில் பயிற்சி பெறத் தவறிவிட்டது ஒன்றைத்தவிர பயிற்சி பெறமுடியாது என்பது அல்ல. பயிற்சி பெற்றால் எங்களுக்கு அந்த அறிவு கைகூடாது என்பதும்