9
பார்த்து காலை மடக்கிக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்வதற்கு முன்னாலேயே, நீங்கள் உங்களுடைய கருணைப் பார்வையினாலேயே அவர்கள் காலை மடக்கிக்கொண்டு எங்களுக்கும் இடந்தரச் செய்யவேண்டும். நியாயத்திற்காக கருணை உள்ளத்தோடு நீங்கள் தீர்ப்பு அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தங்களுடைய ஆட்சியின் கீழ் இந்த மன்றத்தின் கண்ணியம் உண்மையிலேயே சிறப்புறும் என்று சொல்லி, இந்தச் சபையின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் காப்பதில் எங்களுக்கும் ஏதாவது பங்கு கிடைக்குமானால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
✽✽✽✽
6—5—57]
[திங்கட்கிழமை
[கவர்னரின் பேருரையைப்பற்றி நிகழ்ந்த விவாதத்தில்]
- பிற்பகல் 1—05
சட்டமன்றத் தலைவர் அவர்களே. மேன்மைதங்கிய கவர்னர் அவர்களின் பேருரையின் மீது இந்த சபையிலுள்ள பலதரப்பட்ட கருத்துக்கள் கொண்டவர்கள் தத்தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான இந்த வாய்ப்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்தினை அதனுடைய சட்டசபை உறுப்பினர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நேற்றும் முன்பும் நடைபெற்று வருகின்ற இந்த கருத்துரை வழங்குதலிலே ஒரு கட்சி மற்றொரு கட்சிக்கு நல்லுரைகளையும் ஆற்றியதை நான் தவறாக எடுத்து கொள்ளவில்லை என்பதையும், மாலை நேரத்தில் எல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்கிற] இருகட்சிகள் காலையில் மட்டும் திடீரென்று காதல் கொண்டுவிட முடியாது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். காதலைப்பற்றித் திருவள்ளுவர்—
"காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இந்நோய்"
என்று கூறி இருக்கிறார்கள். அரசியல் உலகத்திலே அந்த நோய் காலையிலே அரும்பி மாலையிலே மலர்கின்றது; என்றாலும் நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பற்றி இந்தச் சட்ட சபை உறுப்பினர்கள் சொல்லுகின்ற கருத்துரைகளையும், மறுப்புரைகளையும் நான் உண்மையிலே வரவேற்கிறேன். ஏனெனில், துவக்கத்திலே நான் எடுத்துச் சொல்லியிருக்கிறபடி, நாங்கள்