பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


-களில் அரிசி உற்பத்தியை உபரியாக்குவதோடு நேர்த்தியான சிலரக அரிசி வகைகளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்.

விவசாயத்துறையில் நாம் பெற்றுள்ள வெற்றி எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கை யூட்டுவதாக இருக்கிறது. அதிக விளைச்சல் தரும் ரக நெல், நெல் விளைச்சல் பெரிதும் உர விநியோகத்தைப் பொறுத்தது, நமக்கு உரப் பற்றாக்குறையாக இருக்கிறது. இங்கு அதிக அளவில் உரத் தொழிற்சாலைகள் துவக்கப்படுமானால் - தேவைக் கேற்றபடி உரம் வழங்கப்பட்டால் - இந்த முன்னேற்றம் நீடிக்குமாறு செய்யமுடியும். இந்த முன்னேற்றத்தை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு நீடிக்கச் செய்தால் - இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை தமிழ்நாடு உபரி மாநிலமாக விளங்கும். நமது நாடு முழுவதுமே உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக ஆகும் நிலைவருமென்றே நான் எதிர்பார்க்கிறேன்.

இயற்கை மாறுபாடுகள் இருக்கவே இருக்கின்றன. இதனை இரைப்பு இயந்திரங்கள் மூலமாக பாசன வசதிகளைச் செய்வதன் மூலம் சமாளித்திடாமல் பூமிக்கடியில் நமது நாட்டில் பெருத்த நீரோட்டம் இருக்கிறது. இந்த நீரோட்டத்தை யந்திர இரவை மூலம் குழாய்க் கிணறுகள் மூலம் வெளிக் கொணர்ந்தால் - இயற்கையின் பாதக விளைவுகளைக் கூட சமாளிக்கலாம் - உண்மையில் விவசாய விளை பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவே நமது நாடு ஆக முடியும். ஏனெனில் நது நாடு விவசாய நாடு. நாம் இதனையே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.