பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

கிடைக்குமென்றால் காந்தியார் ஒப்பியிருப்பார். கதர் இயக்கத்தை அவர் துவக்க அடிப்படைக் காரணமே மனிதாபிமான உணர்வேயாகும்.

கையினால் செய்யப்பட்ட பொருள்கள் வாய்ப்பும் வசதியுமுள்ளவர்களால் வாங்கப்படுபவை. தேவைப் பொருள்களல்ல.

எனவே விற்பனையாளர் நல்ல கனிவோடு நட்புணர்வோடு பழகி அவற்றை விற்கவேண்டும். விற்பனைத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நானும் அமைச்சர்கள் கருணாநிதியும், முத்துசாமியும் இவ்விழாவில் கலந்துகொண்டது பொருத்தமா என்று சிலர் எண்ணக்கூடும். நாங்கள் கலந்துகொண்டது புதுமைதான், இந்த இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் இருப்பார்கள், ஈடுபாடு இல்லாத நாங்கள் வருவதைப் புதிதாகச் சிலரைச் சேர்த்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாகக் கருதவேண்டும், புதிய அரசு ஏற்பட்டதும் நாங்கள் கதர்த்துறையை மூடிவிடப் போகிறோம் என்ற ஒரு அச்சம் இருந்தது. திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து பலர் என்னை வந்து பார்த்தார்கள். ஏற்கனவே உள்ளவற்றுக்குக் காரணமற்ற குந்தகம் உண்டாக்கும் பொறுப்பற்ற அரசல்ல என்று அவர்களிடம் சொன்னேன்.

கதர்த் தத்துவம் நிரந்தரமான தத்துவமாகி விட்டது. இடைக்கால நிவாரணமாகவே அதைத் கருதவேண்டும். இது ஒரு மனிதாபிமான முயற்சியே.

எனவே இதை இந்த அரசு போற்றிக் காத்திடும். கதர், விஷயத்தில் நாங்கள் மாறிவிட்டோமா இல்லையா? என்று ஆராயுமுன் கதர் எத்தனை மாற்றங்களைப் பெற்றுள்ளதென்று யாருங்கள்.

கையால் நூற்று கையால் நெய்வதே கதர் என்றிருந்தது