பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

“பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த சாதி என்பதே இருக்கக்கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்னியோன்யமாய் வாழவேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன் ”

இதுவே உலக உத்தமர் காந்தி அடிகளின் இலட்சியம் என்று பண்டித ஜவஹர்லால் நேரு கூறியதை நினைவு படுத்துகிறேன்.

கதர்த்தத்துவம்
நிரந்தரமானதல்ல.

தமிழகத்து வியன்பொருள்களைப் போலவே உலகின் வேறு பல நாடுகளிலும் செய்திறனால் உருவான பொருள்களுக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகின்றது,

இங்கிலாந்து நாட்டில் கம்பளங்கள் இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இவற்றில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் சிறுபான்மையோர். நூற்றுக்கு ஒருவர் ஆயிரத்துக்கு ஓரிருவர் என்றே இருப்பர். விஞ்ஞானத் தொழில் வளர்ச்சி அடைந்திருப்பதால் அங்கு நிரம்பவேலை வாய்ப்புகள் உள்ளன. அந்த நிலை இங்கு இல்லை, அந்த நிலை இன்னும் நமக்குக் கிட்டவில்லை என்றுதான் சொல்வேன், தேவையில்லை என்று நான் சொல்லவில்லை, மகாத்மா காந்தியும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள்.

உள்ளம் நெகிழ்ச்சி அடையும் உத்தம குணம் படைத்த காந்தியடிகள் நாட்டைச் சுற்றிப் பார்த்து வேலை வாய்ப்புக் குறைவினால் மக்கள் பட்ட அவதியைக்கண்டு அவர்நிலை உயர கதர் இயக்கம் தோற்றுவித்தார். விஞ்ஞானத் தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும்போது கைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோரது எண்ணிக்கை குறையும். பொருளாதார நீதி