பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


மக்களிடம்
விருது பெற்றவர்கள்!

தமிழ் நாட்டின் தலை சிறந்த கலைஞர் என்ற முறையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சங்கீத. நாடக சங்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறும் கலைஞர்கள் நீண்ட நாளைக்கு முன்பே பொதுமக்களின் நல்வாழ்த்துக்கள் என்ற விருதுகளைப் பெற்றவர்கள் தான். என்றாலும் நாமும் நமது பங்கைச் செலுத்தா விட்டால் எங்கே தவறாகக் கருதிவிடப் போகிறார்களோ என்று கருதித் தான் விருது வழங்குகிறோம்.

பெரும் புலமை பெற்ற இந்தக் கலைஞர்கள் பொது மக்களின் மத்தியில் நல்ல நிலை பெற்றிருப்பவர்கள். கலையால் இவர்கள் முன்னேற்றம் கண்டிருப்பதுடன் அவர்களை ஒத்தவர்களையும் நாட்டுக்குத் தந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களைப் பாராட்டுவதிலேயும் விருது வழங்குவதிலேயும் அரசாங்கமும் இந்த அமைப்பும் பெருமைப்படுகிறது.

ஏழ்மையிலும் வளர்கிறது
நமது கலை!

மற்ற நாடுகளின் கலைச் சிறப்புக்கும் நமது நாட்டின் கலை வளர்ச்சிக்கும் அடிப்படையான ஒரு வித்தியாசமிருக்கிறது. செல்வ வளத்தோடு மற்ற நாடுகளிலே கலையை வளர்க்கிறார்கள். ஆனால் நம்முடைய நாட்டிலோ ஏழ்மை இருக்கும் போதே கலையும் வளர்க்கப் படுகிறது. நம்முடைய நாட்டு மக்களும் வறுமை நிலையிலும் கலைச் சுவையை--நுகருகிறார்கள்--கலைஞர்களை வாழ்த்துகிறார்கள்--வளர்க்கிறார்கள் --கலையை வளம் பெறச் செய்கிறார்கள் என்றால், செல்வச் செழிப்பிலே இந்நாட்டு மக்கள் இருப்பார்களானால் கலையை வளர்க்கும் கலைஞர்களை எவ்வாறெல்லாம் போற்றுவார்கள்