பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


வதோடு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை அந்த அரசு தரவேண்டும் என்று வலியுறுத்தியிருப்பேன்,

அதற்கு உன் ஒத்துழைப்பு வேண்டும் - என்று அவர்கள் கூறுவார்கள்;

"என் ஒத்துழைப்பு உனக்கு ஏன்? மக்களுக்குச் சரிவர உணவு முதலிய தேவைகளைத் தர முடியாத நீ - மக்களின் ஆதரவு பெற்ற அஜாய் முகர்ஜி அமைச்சரவையைத் தூக்கி எறிந்து விட்டு கோஷ் அமைச்சரவையை கொண்டு வந்தது ஏன்? இதுதான் ஜனநாயகமா? என்று டில்லி அரசு வெட்கித் தலை குனியும்படியாகக் கேட்பேன்!

இப்போது ஜனநாயகம் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அரசு கலைக்கப்பட்டதைப் பற்றி அரசியல் தலைவர்கள் 'ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு விட்டது" என்று கூறுகிறார்கள். ஆனால் கலைப்பதற்கு உத்தர விட்டவர்கள் "ஜனநாயகத்தைக் காப்பாற்ற உத்திரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது" என்று கூறுகிறார்கள்.

ஆகவே இதில் எது உண்மை? எது ஜனநாயகச் செயல் என்பதை எண்ணிப் பார்த்திடவேண்டும்!

மேற்கு வங்கத்திலும் அரியானாவிலும் நடத்தப்பட்ட செயல்களுக்கு யார் பொறுப்பானவர்கள்; யார் தவறு செய்தவர்கள் என்று என்னிடம் கேட்கப்பட்டது.

நான் கூறினேன் - இருதரப்பிலும் சரியான செயல்களும் இருக்கின்றன; இரு தரப்பிலும் தவறுகளும் இருக்கின்றன;

இது வேடிக்கையான கருத்தாக இருக்கலாம். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள கருத்து புரியும் !

டில்லிப் பேரரசு காங்கிரசல்லாத அரசுகளை கவிழ்க்க முயற்சி எடுத்தது தவறுதான். அதுபோலவே பதவி. மிட்டாய்களுக்காக கட்சி மாறுபவர்களை கூட்டணியில் வைத்துக் கொண்டதும் தவறுதான்! 24 மணி நேரத்தில் அமைச்சராக