பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


இருந்து - பிறகு எதிர்க்கட்சிக்குப்போய் - அதன் பிறகு"திரும்புபவர்களை வைத்துக்கொண்டிருந்ததும் தவறுதான்!

கவர்னருக்கு அமைச்சரவையைக் கலைக்கும் அதிகாரம் இப்போது இருப்பதாகக் கூறலாம். ஆனால் அது தேவைதானா; சரிதானா - என்பதை சுப்ரீம் கோர்ட்டின் கருத்தைக் கேட்க வேண்டும்!

பொதுவாக இந்த அரசியல் நிகழ்ச்சிகள் காட்டும் பாடம் -இந்தியாவில் ஜனநாயகம் ஆட்சியாளரால் கீழ்நிலைக்கு தள்ளப்படுகிறது என்பதுதான்!

மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி நிலத் தகராறு நடைபெற்ற போது டில்லி தலையிடவில்லை; கேரோக்களும் வேலை நிறுத்தங்களும் நடைபெற்றபோது டில்லி தலையிடவில்லை!

ஆனால், நக்சல்பாரி இல்லாதபோது - கேரோக்களை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் அஜாய் முகர்ஜி கூறிய பிறகு இந்தக் கலைப்பு உத்திரவு வரக் காரணம் என்ன?

இந்தச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்: இந்தக் குழப்பம் தெளிவுபட வேண்டும்; இந்த அறைகூவலுக்கு பதில் கிடைத்தாக வேண்டும்!

டில்லியின் செய்கை
தெரிவிக்கும் கொள்கை

வெளிப்படையாக டில்லிப் பேரரசின் செயல் நமக்கு அறிவுறுத்துவது இதுதான்

எந்த ஒரு காங்கிரசல்லாத அரசாங்கமும் நெடுங்காலம் இயங்குவதை டில்லி அரசு பார்த்துக் கொண்டிருக்க சகிக்காது? மேற்கு வங்கத்திலும் ஹரியானாவிலும் நடந்த அரசைப் பற்றி மக்களுக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை, ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை. ஆகவே அரசுகள் கலைக்கப்பட்டன. இன்றுள்ள அரசியல் சட்டம் எந்த மாநில மக்கள் அரசையும் கலைக்கும் அதிகாரத்தை டில்லிக்குத் தந்துள்ளது.