பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


நாம் ஜப்பானையும்
மிஞ்சலாம்

நம் நாடு வெப்பமுள்ள நாடு! இவ்வளவு வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு வேர்வை ஆறாகப் பெருகியோட உழைப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். இயற்கை வளத்தைப் பயன் படுத்தி தொழில் திறனை உண்டாக்குபவர்கள்---தொழிற் சாலையை நடத்துபவர்கள் இருக்கிறார்கள்.

திடீர்ப் புரட்சி செய்ய வேண்டுமென்ற எண்ணமில்லாத நாடு இந்த நாடு! பிறகு ஏன் மந்த நிலையில் தொழில் நடைபெறுகிறது? எந்த விதத்தில் வேலை செய்தால் தொழில் வளருமோ- அப்படியில்லாமல் இருப்பதால் தான் குறை ஏற்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை.

திட்டமிட்டுச் செயலாற்றினால் 15 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டைவிடச் சிறப்பாக நம்நாடு திகழும் என்பதில் யாரும் ஐயப்பட வேண்டாம்!

இப்பொழுது எங்கு பார்த்தாலும் ஆலைகள் எழ ஆரம்பித்து விட்டன. தொழிலாளர்கள் இந்தச் சமுதாயத்திற்குப் புது உருவத்தைக் கொடுக்கிறார்கள்.

பாரதி சொன்னார் தொழிலாளர்கள் பிரம்மாக்கள் என்று? பிரம்மாக்கள் என்றால் தெய்வங்களல்ல. உற்பத்தி செய்பவர்கள். உற்பத்தி செய்வதுதான் - ஆக்குந்தொழில் தான் பிரம்மாவுக்கு உரியது என்று புராணங்கள் கதை சொல்லும்.

அதைப் போல தொழிலாளர்கள் பிரம்மாக்களாகத் தான் இருக்க வேண்டுமென்று நினைத்தால் - தொழில் இருக்கும் ஆனால் வளமிருக்காது.

தொழிலாளர் உரிமைகளையும், அவர்கள் நலனையும் எவ்வளவுக்கெவ்வளவு பாதுகாக்கின்றோமோ அவ்வளவு விரிந்த அளவில் தொழில் வளம் பெருகும். நாட்டுடைமை சேதமாகா-