பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மல் செயல் படுமானால் தொழிலைப் பெருக்கலாம், தொழிலாளர் தங்கள் வாழ்வு ஒளிவிடும் அளவு உழைக்க வேண்டும்.

முதலாளிகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்! முன்பு முதலாளிகளைத் தொழிலாளர்கள் பார்க்க முடியாது. கோயில் நந்திபோல எட்டுப் பேர் வெளியே காவற்காரர்கள் என்ற பெயரில் இருப்பார்கள்.

இயந்திரத்தை மட்டும்
பேணினால் போதாது !

ஆனால் இன்றிருக்கும் முதலாளிகள் காலம் போகிற போக்கிற்கு ஏற்றவாறு நடப்பவர்கள். கல்வித்திறன் மிக்கவர்கள். அதனால் தொழிலாளர் உரிமைகளை அவர்களுக்கு. நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தொழிற்சாலையில் ஓடுகின்ற இயந்திரம் நாள்தோறும் எழுப்புகின்ற ஒலிக்கு மாறுபாடாக - பழக்கமில்லாத சத்தத்தை எழுப்பினால் " என்ன இது, என்றுமில்லாமல் இன்று புது விதமாக ஒலி எழுப்புகிறதே" என அதை நிறுத்தி - அதைப் பழுதுபார் என்று முதலாளி சொல்வார். அப்படிப் பழுது பார்த்தால் தான் இயந்திரம் கெடாமல் இருக்கும்; இயந்திரம் கெட்டால் தொழில் கெட்டுவிடும்.

எண்ணெய் விடவேண்டிய இடத்தில் எண்ணெய் விட்டு—மரையை இறுக்க வேண்டிய இடத்தில் இறுக்கி வைத்து—துடைக்க வேண்டிய இடத்தில் துடைத்து இயந்திரங்களைப் பாதுகாப்பதுபோல் முதலாளிமார்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.

தொழிலாளி கண்கலங்கினால் " ஏன் உன் கண்கள் சிவந்திருக்கிறது-ஏன் இறைக்க இறைக்க இப்படிப் பெருமூச்சு விடுகிறாய்?'" என்று கேட்கவேண்டும் — " எவ்வளவோ பெரிய பயங்கரங்களையெல்லாம் தூக்கும்போது 'இல்லாத சோா்வு இப்பொழுது ஏன் வந்தது? என்று அவன் முகம் மலரும் விதத்தில் பரிவோடு கேட்டு ஆவன செய்-