பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


-கள் வண்ணாரப்பேட்டையில் தண்டையார்ப்பேட்டையில் வீதியோரங்களிலோ - குடிசைகளிலோ - குடியேற வேண்டிய வேதனையான நிலை ஏற்பட்டிருக்கும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற ஒரு சொல்லைச் சங்கத் தலைவர் நாச்சிமுத்து கூறினார். அந்தக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்படவேண்டிய ஒற்றுமை கைத்தறிக் கொள்கை விஷயத்திலும் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

விசைத்தறியின் போட்டியால் கைத்தறிக்கு ஏற்படும் கஷ்டத்தை நஷ்டத்தை நாங்கள் மட்டுமல்ல - மத்திய அரசும் தாங்க முன்வர வேண்டும்.

விவாதத்திற்கு
அப்பாற்பட்டது தத்துவம்

தத்துவம் எப்போதும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. கூட்டுறவு இயக்கம் தேவை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். நடைமுறையில் எல்லா மக்களுக்கும் பயன் தருவதாக கூட்டுறவு இயக்கம் அமைந்தால் எல்லோரும் வரவேற்பார்கள். நடைமுறை இன்றைய தினம் மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கூட்டு-உறவு என்ற இரண்டு சொல் சேர்ந்து கூட்டுறவு என்று பெயர் பெற்றுள்ளது. கூட்டு மட்டும் என்றால் லரபத்துக்குத்தான். உறவு என்று இருப்பதால், அது லாபம் அற்று இருக்கிற உறவாகத்தான் இருக்கவேண்டும்.


கூட்டுறவு இயக்கம் சரியாக நடக்கவில்லை என்ற எண்ணம் மக்களிடத்தில் இருக்கிறது. அது இல்லை என்று மட்டும் சொல்ல முடியாது. அந்தக் குறையை நீக்க முயற்சித்தால் ஒவ்வொரு குடும்பமும் பங்கு பெற முன் வருவார்கள்.