பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


-டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் சந்தை தேடிக் கொடுக்கும் பொறுப்பு மத்திய அரசைச் சார்ந்ததாகும்.

ஆனால் அமைச்சர்கள் கைத்தறித் தொழிலில் எவ்வளவு அக்கறை செலுத்தினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். அமைச்சரின் பெயரைச் சொல்வது அரசியல் நாகரிகம் ஆகாது.

அந்த அமைச்சரிடம் கைத்தறியாளர் பேட்டிகண்டு எண்பதாம் நெம்பர் நூல் வேண்டும் என்று கேட்டதற்கு "எண்பதாம் நெம்பர் நூல் தரச் சொல்ல இயலாது. எண்பதாம் நெம்பர் நூல் 500 பேல் தானே கேட்கிறீர்கள். நாற்பதாம் நெம்பா் நூல் 1000 பேல் தருகிறேன். நாற்பதும் நாற்பதும் எண்பது தானே; ஐநூறும் ஐநூறும் ஆயிரம் தானே!" என்றாராம்.

கேலி புரிவதற்காகக் கூறவில்லை: கைத்தறியாளர் விஷயத்தில் அரசாங்க அக்கறை எப்படியிருந்தது எனக்கூற விரும்புகிறேன்!

இந்த நேரத்தில் மக்களுக்கும் ஒன்று கூறிக்கொள்வேன்

தாய்மாரின் உதவி

.

நெசவுத் தொழில் இது நாள் நசித்துப் போகாமல் இருக்க -நெசவாளர் பாதிவயிறாவது சாப்பிட உதவுபவர்கள் நமது நாட்டுத் தாய்மார்கள்தான்! ஆடவர்கள் எப்படிப்போனாலும் தாய்மார்கள் தான் மறவாமல் கைத்தறியாடைகளை வாங்குபவர்கள்! ஆகவே கைத்தறியாளர்களைக் காப்பாற்றும் தாய்க் குலத்திற்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆடவர்களைப்போல் தாய்மார்களும் ஆமதாபாத்தையும், கட்டாவையும், நம்பத் தொடங்கினார்கள் என்றால் நெசவாளர்-