பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


இந்தியா போன்ற நாடுகள் வளம்பெற கை கொடுத்து உதவ வேண்டும். வெண்டல் வில்கி என்ற அமெரிக்கப் பெருமகன் ஓருலகம் என்று சிந்தித்துக் கருத்தை எடுத்துரைக்கிறார். இதை மனதில் கொள்ளவேண்டும், உலகில் உள்ள இயற்கைவளமனைத்தும் மனித இன முழுமைக்கும் பயனளிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.

செல்வமோ செழிப்போ அவை மக்களால் உணரப்பட வேண்டும், உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கினை அளித்திடவேண்டும். இவை மறுக்கப்படுகிற எந்த ஒரு அமைப்பையும் முறையையும் உலகம் வரவேற்காது என்பதோடு சகித்துக் கொள்ளவும் மாட்டாது. அத்தோடு அம் மாதிரி ஒரு முறையை இன்று நம்மால் தாங்கிடவும் முடியாது. அத்தகைய முறை நிலவுமானால் தொழில் உலகம் துருப்பிடித்து, கேட்பாரற்று ஒதுக்கப்படும் உழைக்கும் தொழிலாளருக்கு உரியதை வழங்கிடுங்கள். அவ்வாறு செய்வதன் வாயிலாக எம்போன்ற எளியோருக்கு ஏற்படுகிற சங்கடத்திலிருந்து எங்களுக்கு விடுதலை கொடுங்கள்.

கட்டைவண்டி நிலையிலிருந்து
ஜீப் நிலைக்கு முன்னேற வேண்டும்.

இந்நாட்டைத் தொழில் வளமுடையதாக ஆக்கும் முயற்சியில் தவறுகளைச் செய்திருக்கிறோம். அவற்றைத் திருத்திக் கொண்டு செயல்படுவோம், கட்டை வண்டி நிலையிலிருந்து ஜீப் நிலைக்கு நாம் முன்னேற வேண்டும் என்று ஒருமுறை நேரு சொன்னார். மக்கள் அந்த நிலையை அடைந்தார்களோ இல்லையோ அதிகாரிகள் ஜீப்புகளைப் பிடித்துக் கொண்டார்கள்.

வேளாண்மைத் துறையை வலிவடையச் செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும், தளராது உழைத்து அதை வலிவுடையதாக ஆக்கிவிட்டோமானால் நம் தொழில்களுக்குத் தேவையான மூலதனத்துக்கு எவரிடமும் உதவி நாடி நிற்கத்