பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. ஆட்சிப் பொறுப்புக்கு ஆளாகும் நேரமிது!


1


இம்முறை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகம் செய்துகொண்டோம். இப்படி நாம் அறிமுகம் செய்து கொள்வதால், நாம் புதிதாக இப்போதுதான் சந்திக்கிறோம் என்று பொருளல்ல.

"தி. மு. க. நகர்ப்புறத்திலேதான் இருக்கிறது கிராமப் பகுதியிலே இல்லை”, என்றார்கள்.

இந்தத் தேர்தலில் கிராமப்புறத்திலேயிருந்து ஏராளமானவர்கள் வெற்றிபெற்று வந்திருக்கிறோம். ஏராளமான உழவர் பெருங்குடி மக்கள் தேர்தலிலே வெற்றி பெற்றுள்ளார்கள். எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்களும் தி. மு. க. வெற்றிக்குப் பாடுபட்டு உள்ளனர்.

எல்லா மக்களும் பரிபூரண நம்பிக்கையுடன் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். இந்தப் புனிதமான நேரத்தில் நாம் அதிகப் பொறுப்புக்களுக்கு ஆளாகி இருக்கிறோம். நாம் அதிகமாகப் பக்குவப்பட வேண்டிய நேரமிது.

மக்கள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பல காரணங்கள் சொல்லலாம். இஃது அகமகிழ்ச்சிக் குரிய நேரமட்டுமன்று. அடக்கத்திற்குரிய நேரமுமாகும்.