பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


இப்படிப் பிரச்சினைகள் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, பிரச்சினைகள் பற்றித் தெரிந்து கொள்வதும் அதுபற்றி மற்ற மாணவர்களிடம் கலந்தாலோசிப்பதும் தவறாகாது. அறிவு முதிர்ச்சியும் வலிமையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுந் திறனும் மாணவர்கள் பெற ஆசிரியர்கள் உதவ வேண்டும். பேராசிரியர்கள்கூடச் சில பிரச்சினைகளைப் பற்றிக் கலந்து ஆலோசிக்கலாம். இப்படிப் பிரச்சினைகளைக் கலந்தாலோசிப்பது நாட்டுக்கு நன்மை பயப்பதாகவே அமையும்.

மிகப் பெரிய ஜனநாயக நாடு இது. ஆனால், மிகவும் ஏழ்மையான நாடு. நமது ஏழ்மையுடன் ஜனநாயகத்தைச் சரிகட்டுவது எப்படி?

ஜனநாயகத்தில் ஒரு நபருக்கு ஓர் ஒட்டு என்று நிலை உள்ளது. ஆனால், ஒரு நபரின் அதிகார வரம்பிற்குள் அநேக ஒட்டுகள் உள்ளன. இதற்குப் பண பலம். சாதி இதர அம்சங்கள் முதலியவை காரணங்களாகும்.

5

தமிழக அரசு உடனடியாக உணவுப் பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ளது. அடுத்து விலைவாசிப் பிரச்சினை. விலைவாசியைக் கட்டுப்படுத்தும்போது, உருவாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். தொழில் வளர்ச்சியைக் கவனிக்க வேண்டுமானால், வரிப்பளுவைக் குறைக்க வேண்டும்.