பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கவிதைகளை, புத்தகங்களைச் சேகரித்துப் பார்த்திருக்க வேண்டும். என்பதை எண்ணியெண்ணி வியந்தேன்.

புத்தகம் எழுதுவோரை ஏனைய நாடுகளில் எல்லாம் வித்தகர்களாகப் போற்றுகிறார்கள். இந் நாட்டிலோ, “ புத்தகம் எழுதி, இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள் ” என்னும் பழிச் சொல் தான் கிடைக்கும். இந்த நிலையிலும் நமது அப்பாதுரையார் அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தரும் பல அரியநூல்களை எழுதி இருக்கிறார்.

நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. திரு. வி. க. போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து ஏடாக்கி நூலாக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபடவேண்டும். மறைமலையடிகளைப் பற்றியோ தியாகராய செட்டியார் பற்றியோ வாழ்க்கைக் குறிப்புகள் இல்லை. தமிழ்ப் பெரும் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நம்மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால் நம்முடைய மரபு பிறகு மறையும். மரபு என்பது இப்போது மறதி என்றாகி விட்டது.

3

பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. நமது பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால், இராச இராச