பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 & என்னை நீதிக்கட்சியைச் சார்ந்தவன் என்று சொல்லித் தாக்குவதில் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ஆம்! நான் நீதிக்கட்சிதான். காங் கிரசுக்கு முந்திக்கொண்டு முதன் முதலில் அது மது விலக்குக் கொள்கை அவசியம் என முடிவு செய்தது. இங்கே இருக்கும் நண்பர் செங்கல்வராயனுக்குச் சொல்லிக் கொள்வேன். அந்த மதுவிலக்குக் கொள்கை மேலுந் தீவிரப் படுத்தத்தான் ஆயிரக் கணக்கான எல்லைக் கற்களைக் கடந்து இங்கே வத்திருக்கிறார் அமெரிக்க நண்பர் ஸ்டீட் ' என்று. சிக்கல்களைத் தீர்த்து வைக்காததனால்தான் ஹேம்லட், தோல்வியுற்றான் என்று சேக்குவீயர் கூறுகின்றார். நாட்டின் முன்னோடியான முதல் பெரும் அமைப்பான காங்கிரசுக் கட்சிக்குச் சொல்லிக் கொள்வேன், சேக்குவீயரின் ஹேம்லட் இருப்பதா இறப்பதா என்று இருந்ததைப்போல் மதுவிலக்குச் சிக்கலிலும் இப்படியா அப்படியா என மயங்கி நிற்கவேண்டாம். ஹேம்லட்டுக்கு நேர்ந்த கதி காங்கிரசுக்கு வேண்டாம் என்று. மதுவிலக்கு பற்றி ஒரு மொத்தமான முடிவுக்கு வாருங்கள். அப்போதுதான் இங்கே அமர்ந்திருக்கும் நண்பர் ஸ்டீட் அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து வரும்போது, ' நாங்கள் எல்லோருமே மது விலக் கினை ஆதரிப்பவர்கள் ' என்று பெருமையுடன், கூறிக்கொள்ள முடியும்,