80
வில் முக்கிய வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்திடுங்கள். சில ஆண்டுகளாயினும், இலாபத்தின் ஒரு பகுதியை இழந்தாயினும், விலை குறைக்க உற்பத்தியாளர்கள் தயங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். உற்பத்தி செய்து விட்டு, விலையைக் கூட்டி விட்டால், அவை வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கும். அப்படி இல்லாமல், இத்தகைய தொழில் உற்பத்திப் பொருள்கள் பட்டிகள் தோறும் பரவி, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு அவர்கள் ஆற்றும் உணவு உற்பத்திப் பணியில் பயனளித்திட வேண்டும்.
இவ்வாறான நிலைமை உருவாகிடவும், தமிழ் நாட்டில் தொழில் முன்னேற்றம் தங்குதடையின்றி ஏற்படவும் உற்பத்தி அதிகரித்திடவும், தொழில் துறையில் குறைந்தது பத்தாண்டுக் காலத்துக்கேனும் சச்சரவுகள் இல்லாது, தொழில் அமைதி நிலவ வேண்டும். தொழில் சச்சரவுகள் கதவடைப்பு என்னும் பெயரிலோ, எந்த வடிவத்தில் தொழில் சச்சரவு ஏற்பட்டாலும், அது தொழிலுக்குக் குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதால், தொழில் சச்சரவுகள் பத்தாண்டுக்காயினும் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.
வகைப்பாடு : பொருளாதாரம்—தொழில் பெருக்கம்.
(13-12-67 அன்று எண்ணூரில் கிரிலோஸ்கர் நிறுவன விழாவில் ஆற்றிய நலைமை உரை.)