உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

உயர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியான இந்த எந்திரங்களில், 99 சதம் இந்தியப் பொருள்களே என்பதையும் ,அதில் 70 சதம் தென்னகத்துச் சிறு தொழில்களால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் அறிந்து, நான் மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாதிரி உள்நாட்டுப் பொருள்களுக்கு மதிப்பளித்து, அவற்றைப் பயன்படுத்தினால் நாட்டில் சிறு தொழில்கள் பெருகி, நாட்டின் உருவையே மேம்பாடுறச் செய்திடலாம்.

தமிழ் நாட்டின் இன்றைய விவசாயி, புதிய முறைகளைக் கையாண்டு விவசாயத்தில் வளங் காணத் துடிக்கிறான். எந்த முறையானாலும், முதலில் மற்றவர் செய்து பார்க்கட்டும். அப்புறம் நாம் செய்யலாம் என்னும் அளவில்தான் அவனது பழமைப் போக்கு உள்ளது.

ஜீவ நதிகள் இல்லாத தமிழ் நாட்டில் நாம் பயிர்ப் பாசனத்துக்கு, நிலத்தின் அடியில் உள்ள நீரையே பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். நிலத்தடி நீரைப் பொறுத்த மட்டில், நாம் நல்ல நிலையில் வளமுடன் இருக்கிறோம். இந்த வளத்தைப் பயன்படுத்த இதற்கு வலுவும், உறுதியும், பாதுகாப்பும், விலை மலிவாகவுமுள்ள இறைவைப் பொறிகள் நிறையத் தேவை.

நாட்டுப் புறங்களிலே நிலவும் வறுமையை உணர்ந்தவன் என்கின்ற முறையில் இறைவைப் பொறிகளை உற்பத்தி செய்வோருக்கு நான் இவ்விழா-