உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20. தேவை தொழிலமைதி


விவசாயத் தொழிலுக்கு முக்கியமான சாதனை ஒன்றைச் செய்து முடித்த கிர்லோஸ்கர் நிறுவனத்தார், அந்தச் சாதனையைப் பதிய வைத்திட நடத்தும் இவ்விழாவுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கிர்லோஸ்கர் நீண்ட பல ஆண்டுகளாக, மிகுந்த சகிப்புத் தன்மையோடும் ,அயரா உழைப்புடனும் இந்த நாட்டின் விவசாயத்தை ஒரு முற்போக்கான தொழிலாக ஆக்கிடப் பாடுபட்டிருக்கிறார்கள்.

வேளாண்மைத் துறை அமைச்சர் இங்குப் பேசுகையில், அயல்நாடுகளில் தயாரான எந்திரங்களையே நம்மவர்கள் விரும்புகிறார்கள் என்று சொன்னார். இதற்குக் காரணம் வழக்கமோ அல்லது மக்களிடையே வளர்ந்து விட்ட மனப்போக்கோ அல்ல. அந்த அந்நிய எந்திரங்கள் நன்றாகவே பணியாற்றும் என்று அவற்றினிடத்தில் ஏற்பட்டு விட்ட நம்பிக்கையாகும். உள்நாட்டுப் பொருள்கள் நூற்றுக்கு நூறு தரமானவை. நன்றாக வேலை செய்பவை என்று மக்கள் நம்பும்படிச் செய்வதே சிறந்த வழி.

உள்நாட்டில் நம்மவர் பெற்றுள்ள தொழில் நுணுக்க, நிர்வாக, விஞ்ஞான அறிவும், திறனும் எந்நாட்டாருடனும் போட்டியிடக் கூடிய அளவுக்கு