பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோ: அப்படியானா கட்டாயம் ஜெயிக்கும் ராஜு,நாளைக்கு சனிக்கிழமை. சனிபகவான் கருப்பு, அவர் வாகனம் காக்கை, அதுவும் கருப்பு, குதிரையும் அதே நிறம், கட்டாயம் ஜெயிக்கும். ரா : நான் காலையிலே சந்திக்கிறேன். வீட்டுக்கு போ. இன்னேரம் உன் சம்சாரம் என்னைத்தான் கண்டபடி பேசி இருப்பாங்க.(ராஜு போகிறான்) Fool) [கோபால் குதிரைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டு மயங்கினவன் போலச் செல்கிறான். எதிரே ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் வரு வதைக் கவனியாமல், மோதிக் கொள்கிறான். அப்போதும் ரேஸ் கவனமாகவே இருந்த தால் ......] கோ: நாட்டிமெயிட் ! ஆங்கிலோ இந்திய மாது: (கோபமாக) பிளடிபூல் (Bloody ராஜு : சாரி, எக்ஸ்குயூஸ்மீ லேடி. (இப்படிக் கூறிவிட்டுச் செல்கிறான், வழியில் ரேஸ் புத்தகத்தைப் பார்க்க, அதிலே நாலாவது ரேசில்- பிளடிபூல் என்ற குதிரை ஓடுவது குறிப்பிடப் பட்டிருக்கவே, தக்தீர், நாட்டிமெயிட், பிளடிபூல் என்று கூறிக்கொண்டே வீடு நோக்கி நடக்கிறான்.) காட்சி 5 இடம்:மற்றோர் வீட்டுக் கூடம். இருப்போர்:- வயோதிகன்; அவனுடைய இரண்டாந்தாரம், ம: தா! (இரண்டாந்தாரம் நாகரிகமாக உடுத்திக்கொண்டு. கர்நாடக உடையிலே இருக்கும் கணவனைப் பார்த்துக் கூறுகிறாள்.) உனக்கு வேறே எதுவும் அகப்படலையா? மேலுக்குப் போட்டுக்கொள்ள இதுதானா கிடைச்சுது. க: ஏன் ? இதுக்கு என்னாவாம் ?'

6

6