பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பு: யார் அந்த ஜம்பு? ரா: என்ன சார்! ஜம்புலிங்கத்தைத் தெரியாதவங்க யார் சார், ரேஸ்கோர்சிலே, இருக்காங்க. பெரிய ஆள் சார் ஜம்பு. ரேஸ் கோர்சிலே, டீ ஷாப் இல்லே, அதுகூட நம்ம ஜம்பு மச்சானுடையதுதான். பு:ஓ! அப்படின்னா அந்த ஆசாமி சொல்லறதும் சரியாத் தானே இருக்கும். நமக்குச் சொன்ன ஆசாமியும் சரியான ஆள்; ஜாக்கி ஜான்சன், ரா : அதனாலேதான், தக்தீர், நாட்டிமெயிட் இரண்டு குதிரை மேலேயும் கட்டி ஆடணும். அதுதான் சரி. பு: ஆமாம்! ஜோசியர் குப்பு சாஸ்திரி, ஒரு சூக்ஷ்மம் சொன்னார். குதிரைகள் ரவுண்டுக்கு வருகிறபோது, உன்னிப்பாக் கவனிக்கணும். எந்தக் குதிரை வலது பக்கமா அடிக்கடி திரும்பிப் பார்க்குதோ, அதன்மேலே கட்டணும்; கட்டாயம் ஜெயம் கிடைக்கும் என்று சொன்னார். ரா: அப்படியானா, மூணு குதிரை மேலேயா பணம் கட்டணும்? கோ: மொத்தம் எத்தனை குதிரை ரவுண்டிலே? ரா ஒன்பது. ஓடும் சார் அந்த பு: பேஷ் ! ஒன்பதுக்கு மூணு,மும்மூணு ஒன்பது, கணக்குச் சரியா இருக்கு சார். ஆமாம் சார்! மற்ற ரவுண்டுகளுக்கு. ரா: வேறே ஏதேதோ பார்த்து வைத்திருக்கிறோம். பு டிரபில் இவன்ட்டுக்கு, நாட்டிமெயிட், நோவா, ஜூலா. ரா : ஜூலாவா? அது இதுவரை பிளேஸ்கூட அடித்த தில்லையே சார். பு: நாட்டிமெயிட் கூடத்தான். என்னவோ, அதுதான் நம்ம செலக்ஷன்.நான் வர்ரேன் சார். (போகிறார்). ராஜு நாட்டிமெயிட் நல்ல குதிரைதான். அரபி தேசத்தது. ஆகாகான் கூட அதை விலைக்கு வாங்கணும்னு பிரயத்தனப் பட்டாராம். முடியலை.

கோ: என்ன நிறம்? ரா: கருப்பு.

5