பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

இடம்:-பாதை. காட்சி. 4 இருப்போர்:-ராஜு, கோபால், புதியவர். [கிண்டி ரேஸ் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டு, ராஜு பேசுகிறான். கோபால் கவலையுடன் இருக்கிறான்.) ராஜு: கோபால்! நாளைக்குக் கட்டாயம் தக்தீர், வின் அடிக்குது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டு. இந்தத் தடவை,வின் கட்டாயம். கோபால் : ராஜு! உன் பேச்சைக் கேட்டுப் போனவாரம் தக்தீர் மேலே ஆறு வின் டிக்கட் எடுத்தேன். (பெருமூச்சு) ராஜு : (சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு) அதற்கு என்னடா செய்வது ? இந்தத் தடவை கட்டாயம், தக்தீர்தான் அடிக்கும். சந்தேகமே வேண்டாம். (இதைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்து சேர்ந்த புதியவர்] புதியவர்: யாரப்பா உங்களை ஏமாற்றிவிட்டது. தக்தீர், பிளேசுக்குக்கூட வராதே. இந்தத் தடவை வின் அடிக்கப் போவது நாட்டிமெயிட், யாரிடமும் சொல்லிவிடவேண்டாம். நாட்டிமெயிட் ஜெயிக்கும் என்று நமக்கு, ஜாக்கி ஜான்சன். சொன்னான். நமக்கு அவன் ரொம்பச் சிநேகிதம். கோ: ஏன் சார் ! நாட்டிமெயிட் கட்டாயம் வருமா? நம்பிக் கட்டலாமா சார். சார்! எனக்கு இதுவரையிலே 500 ரூபாய்க்கு மேல் நஷ்டம் சார். ஒயிப் கழுத்துச் செயினைக் கூட மார்வாடி யிடம் வைத்துவிட்டேன் சார். இந்த ரேசிலே ஜெயிக்காவிட்டா, என்பாடு ரொம்ப திண்டாட்டமா போயிடும் சார். இப்ப நான் நாட்டிமெயிட் மேலே பு: நமக்குந்தான் சார் நஷ்டம். ஆனா, சொன்னது இருக்கே, இது நிச்சயம். தான் நான் பத்து வின் டிக்கட் எடுக்கப்போறேன். கோ: என்னமோ சார், நானும் உங்களைத்தான் மலைபோல நம்பி, நாட்டிமெயிட் மேலே கட்டிப் பார்க்கிறேன். பு: கட்டுங்க சார், பயப்படாமே.

ரா : கோபால்! எதற்கும் கொஞ்சம் ஜாக்ரதையாக இருக்க வேணும். தக்தீர் ஜெயிக்கும் என்று எனக்குச் சொன்னது யார் தெரியுமா? நம்ம ஜம்பு.

4