பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்: ஏழைகள் வயிறு எறியச் செய்தாயே, இப்ப பார், எவ்வளவு எரிச்சலா இருக்குன்னு நெருப்புச் பிடிச்சதும், தெரியும். [வேண்டாம்! வேண்டாம்!. என்று ஜாடை காட்டு கிறான் ஜெகவீரன்.] ர : தேவரை, சித்திரவதை செய்தவனல்லவா நீ ) [இதற்குள் சேகர் படத்தையும் காமிராவையும் கண்டுபிடித்துவிடுகிறான். ரத்னம், சேகரிடம் சென்று படத்தைப் பார்க்கிறான். ஜெகவீரன் பாய்ந்து சென்று ரத்னத்தின் கைத் துப்பாக்கி மேஜைமேல் இருந்ததை எடுத்து, ரத்னத்தை நோக்கிச் சுடுகிறான். ரத்னம் ஐயோ! என்று கூவிக்கொண்டு கீழே விழுகிறான். அந்த அலறலைக் கேட்டுப் பயந்த ஜெகவீரன், துப்பாக்கியைக் கீழே நழுவ விடுகிறான். சேகர். அதைப் பாய்ந்து எடுத்துக்கொள்கிறான். ரத்னத்தைப் பிறகு பாக்கியைக் காட்டி ஜெமீன்தாரனை மிரட்டு கிறான்.) பார்த்துவிட்டு, துப் சே: கொலை! படுகொலை! செய்துவிட்டாய்! பார் உன்னைப் போலீசிலே ! போலீஸ்! போலீஸ்! [ஜெகவீரன் பேசமுடியவில்லை. வாய்க்கட்டை அவிழ்த்துக்கொண்டு.) ஜெ: அப்பா! சேகர்! படம் உன் கைக்கு வந்துவிட்டது. சுசீலா உனக்கேதான். என் உயிரைக் காப்பாற்று, இவனை மறைத்துவிடலாம். என் தோட்டத்துக்குப் பக்கத்திலே ஒரு அகழி இருக்கிறது. அதிலே போட்டுவிடலாம். சே: என் உத்தம நண்பனைக் கொலை செய்த உன்னையா விடுவேன். முடியாது. ஜெ: (காலில் வீழ்ந்து) நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் சேகர்! என்னைக் காப்பாற்று. சொல்கிறபடி கேட்கிறாயா? ஜெ: கேட்கிறேன்.

.99

99