பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ: சத்தியமா? இன்னம் வேணுமானா, நாளைக்கு பாங்கியிலே வாங்கித் தருகிறேன். இந்த டாக்டர் உனக்கு இதற்குமேலேயா பணம் கொடுப்பான். (ரத்னம் நோட்டுக் கட்டைப் பத்திரப்படுத்தித் கொள்கிறான்.] .ஜெ: (வெற்றிச் சிரிப்புடன்) டே! சேகர்! பணம் கொடுத்தா, ஆள் அழைச்சிக்கிட்டு வந்தே, என்னைக் கொள்ளை அடிக்க. உன்னாலே எவ்வளவுன்னு செலவு செய்யமுடியும். பார்த்தாயா! இப்போ? [ரத்னம் பணத்தைப் பத்திரப்படுத்தியானதும்] ர: (ஜெமீன் தாரனைப் பார்த்து) எடுடா! படத்தை எடு! ஜெ: (திகிலடைந்து) பணம் கொடுத்தேனே ! ர: அதைத்தான் வாங்கிக்கொண்டேனே ! பணம் நீயாக் கொடுத்தது. படம், நான் கேட்கறது இல்ல, எடு படம். (தாக்குகிறான்.) ஜெ: மோசக்காரா! கொள்ளைக்காரா! (ஜெகவீரனை.ரத்னம் பிடித்துக்கொள்ள சேகர், பீரோவை ஆராய்கிறான். படம் இல்லை. திகைக்கிறான்.) ர: (மேலும் தாக்கி) எங்கே படம்? உயிர் போனாலும் சரி, படத்தைக் காட்டமுடியாது. ர : அவ்வளவு பெரிய தைரியசாலியா நீ. [வாயில் துணி அடைத்துக் கட்டிவிட்டு, கை விரல் களில் துணி சுற்றி, எண்ணெய் தோய்த்து நெருப்புக்குச்சி கிழித்து] எத்தனை குடும்பங்களை நாசம் செய்திருப்பே, இந்தக் கைகளாலே! கொளுத்தறேன்! அப்ப உண்டாகுது பார் வேதனை, அதைவிட அதிகமான வேதனையை அந்தக் குடும்பமெல்லாம் அனுபவித்ததுன்னு தெரிந்துக்கொள். [ஜெகவீரன் கண்கள் மிரட்சி அடைகின்றன. தீக்குச்சி அணைகிறது. வேறோர்.

கொளுத்திக்கொண்டு)

98