பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்ப புரியும்,நம்ம முரட்டுத்தனம். (ஜெகவீரர் எழுந்து தள்ளாடி நிற்கிறார்.) ர : எங்கே அந்தப் படம்? ஜெ: (திகிலடைந்து) எந்தப் படம்? உங்க அப்பன் படம்! ராஸ்கல்! ஏதாவது தெரியுமா? சே: தேவர், பவானியைக் கொலைசெய்தார் என்பதைக் காட்டும் படம். ஜெ: என்னிடம் இல்லையே. [ஜெமீன்தாரன் மேல் ரத்னம் பாய்ந்து தாக்கியபடி] படம் இல்லையா! இல்லையா! இல்லே! ஜெ: (திணறி) இருக்கு தரமுடியாது. ர : தர-தர-- முடியாது- முடியாதா-என்னிடமா கிறே. நான் யார் தெரியுமா? டாக்டரில்லே !--தெரியுதா. (அடிபட்ட ஜெகவீரன் அழுக்குரலில்] இருக்கு! இருக்குது! கொடுக்கிறேன்! [மேலும் தாக்கி] சொல் (ரத்னம் அடிப்பதை நிறுத்தியதும். சேகரைப் பார்த்து.) ஜெ: டே! சேகர்! ஒரு கொலைகாரப் பயலோடு வந்து கொள்ளையா அடிக்கறே. (ரத்னம் ஜெமீன்தாரனைத் தாக்கி] ர: டாக்டரிடம், என்னடா பேச்சு! உதைக்கிறது நானு, அங்கே பாத்து உறுமறயே என்ன? எடு படத்தை, [பீரோ அருகே போகிறார். ரத்னம் பீரோவைத் திறக்கிறான். ஜெமீன்தாரன்நோட்டுக் கட்டு எடுத்து ரத்னத்திடம் கொடுத்து] ஜெ: இதோ பார், இரண்டாயிரம் இருக்கு. என்னை விட்டு விடு. இந்த டாக்டரு உனக்கு என்ன கொடுக்க முடியும். இவனைத் துரத்து. N ர': நிஜமா இரண்டாயிரம் இருக்கா? 13-

97

97