பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதைக்கும் பயங்கரம் நம்மைச் சூழ்ந்தது. அப்பப்பா! நினைத் தாலும் நெஞ்சு நடுங்குகிறது. சு: ஓர் இரவு என்றாலும் உள்ளத்தை ஓராயிரம் ஈட்டி கொண்டு குத்திவிட்டதே, அன்பே! சுசீலா! உன் சே: ஆனால் துயரம் தொலைந்தது, விடியப்போகிறது, வாழ் விலும் மறுமலர்ச்சி உண்டாகப் போகிறது. அப்பாவின் வாழ்வை அவதிக்குள்ளாக்கிய இரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு, அவனுடைய கொட்டம் அடங்கிவிட்டது. ஒரு இரவிலே, எவ்வளவு மர்மங்கள், குடும்ப ரகசியங்கள் வெளி வந்தன. சுசீலா ! ரத்னம் யார் தெரியுமா? காதலனாக நடிக்கச் சொன்னாயே அந்தக் கள்ளனை ........ சு: சொன்னானா உண்மையை. சே: பூராவும். ரத்னம் யார் தெரியுமா? உன் அண்ணன். உன் தகப்பனாரின் பால லீலையின் விளைவு. சொர்ணம் என்ற மாதை தேவர் காதலித்தார், உன் அம்மாவைக் கலியாணம் செய்துகொள்வதற்கு முன்பு. பிறகு கைவிட்டார். சொர்ணத்தின் மகன், ரத்னம். என்ன ஆச்சரியம்! சு: இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஆயுட் கால முழுதும் நாம் இந்த ஓர் இரவை மறக்கமுடியாது. (ஜன்னலருகே போய் நின்றுகொண்டு வானத்தைப் பார்த்துவிட்டு) சுசீலா! சந்திரன் எப்படி, மேகங்கள் சூழ்ந்தாலும், விரட்டி விட்டு, வெற்றியுடன் பிரகாசிக்கிறானோ, அதுபோல நமது காதலும், ஆபத்தை எல்லாம் வீழ்த்திவிட்டு வெற்றியுடன் ஜோதியாக விளங்குகிறது. சந்திரன் கூடப் பொறாமைப் படுவான் சுசீலா? [காதல் களிப்புடன் "வானில் உறைமதியே"

என்று பாடுகின்றனர்.]

103