பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடிப்பாடி இருக்கவேண்டிய அழகியை, அரக்கமாதர் உருட்டி மிரட்ட, அவள் அஞ்சும்படியான நிலையிலே வைத்தேன். அந்த அழகியின் கண்கள் குளமாயின! நான் இரக்கம்காட்டி னேனா? இல்லை! இரக்கம் காட்டவில்லை! தேகம் துரும்பாக இளைத்துவிடுகிறது, தேவ காலனே ! என்று என்னிடம் கூறினர். கோதாக் கூந்தல்! பேசா வாய் ! வற்றாத ஊற்றெனக் கண்கள்! வைதேஹி, விசாரமே உருவெடுத்தது போலிருக்கிறாள் என்று சொன்னார்கள். பழம், பால், மது, மாமிசம், மலர், எதனையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி என்று தெரிவித்தார்கள்! சரி! புத்தி கூறு! மிரட்டு! கொன்றுபோடுவேன் என்று சொல் ! பிடிவாதம் கூடாது என்று தெரிவி! தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி, ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று சொல்!-என்றுதான் என்னிடம் சேதி சொன்னவர் களுக்குச் சொல்லி அனுப்பினேன். இரக்கம் காட்டவில்லை! கொலுமண்டபத்திலே, கொட்டி அளந்தான் விபீஷணன்! தம்பீ ! உனக்குத் தாசர் புத்தித் தலைக்கேறிவிட்டதடா! என்று கூறி உட்காரவைத்தேன். இரக்கம் காட்டவில்லை! போதுமா? இன்னம் ஏதாகிலும் கூறட்டுமா, ஈரமற்ற நெஞ்சினன் நான் என்பதற்கான ஆதாரங்கள் 1 இதேது, அரக்கன் முரடன் மட்டுமில்லை, முட்டாளாகவுமன்றோ இருக் கிறான், எதிர்க்கட்சிக்காரன் கூறுவதைவிட, ஆணித்தரமாகக் குற்றப்பட்டியைத் திட்டமாகக் கூறுகிறானே, என்று யோசிக் கிறீர்களா? இன்னமும் கொஞ்சம் செந்தேன். ஊற்றுகிறேன் உங்கள் சிந்தனைக்கு! இலங்கையில் இடம் களத்திலே, என் தம்பி மாண்டான்! கதறினர் மக்கள்! என் மகன் மாண்டான், மண்டோதரி மாரடித்து அழுதாள் ! என் மக்களின் பிணம், மலைமலையாகக் குவிந்தன, எங்கும் இரத்தம்! எங்கும் பிணம்! நாசம் நர்த்தனமாடிற்று! ஏவிய. அழிவு, ஆழிசூழ் கொண்டது. கானமும் கட்டளையும், ஏவலரின் பேச்சும் காவலரின் கெம்பீர முழக்கமும், எந்த இலங்கையிலே நித்ய நாதமாக இருந்ததோ, அங்கு குடலறுத்தோர். சுக்குரல், கரமிழந்தோர் கதறல், பெண்டிரின் பெருங்குரல், பிணங்களைக கொத்தவந்த பெரும் பறவைகளின் சிறகொலி, இவை நிரம்பின ! நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை. 109 அயோத்தியான் பிடித்துக்

பணிவான

108