பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மத்தைக் காப்பாற்ற அநாரியத்தவசியைக் கொன்றான்! அவன் உரிமை அது என்றான். என் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது, தவறாகுமா? கம்: அதுகூடக் கிடக்கட்டும். நீ இரக்கமெனும் பொருளிலா அரக்கன்! ஆகவேதான் உன்னை இராமர் கொன்று இலங்கையை அழித்தார். இரக்கம் உயர்ந்த பண்பு! அதை இழந்தவர்களைத் தண்டிப்பது, தேவப் பிரீதியான காரியம், நியாயம், தர்மம்; அவஸ்யம்! நீதி: (கம்பரைப் பார்த்து) இரக்கமின்றி இரவணன் நடந்து கொண்டவைகளை விவரமாகக் கூறும்..... கம்: ஆஹா ! தடையின்றி இராவணன் மகாபண்டிதன், வல்லமை மிக்கவன்,தவசியும்கூட, சாமவேதம் பாடினவன்!. சௌர்யத்தில் நிகரற்றவன். எல்லாம் இருந்தது அவனிடம், இரக்கம் என்ற ஒரு பொருள்தான் இல்லை. இரக்கமின்றி இராவணன் செய்த பல கொடுஞ் செயல்களை நான் விவரமாகக் கூறுகிறேன் கேளுங்கள். இரா: கம்பரே ! சிரமம் ஏன் தங்களுக்கு? இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத அரக்கன் என்பது குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் கூறி ஏன் அலுத்துப் போகவேண்டும்? நானே கூறு கிறேன், கேளும். பூங்கொடி துவள்வது போலானாள், அந்தப் பெண் அவிர்மேனியாள், சீதா நான் சிறை எடுத்தபோது! நான் இரக்கங் காட்டவில்லை! அலறினாள், நான் அரக்கன் என்று அறிந்ததும், நான் இரக்கங்காட்டவில்லை! சபித்துவிடுவேன் என்றாள். புன்னகை புரிந்தேன்! அழுதாள், சிரித்தேன்! பிராணபதே! என்று கூவினாள்,எதற்கும் நான் இரக்கங்காட்டவில்லை! அடே துஷ்டா! அரிபரந்தாமனின் அவதாரமடா இராமன். அவனுடைய தர்மபத்தினியையா இந்தக்கோலம் செய்கிறாய் என்று வயோத்திக சடாயு வாய்விட்டு அலறினான். சீதை உயிர் சோர, உடல்சோர, விழியில் நீர்வழிய, கூந்தல்சரிய, ஆடை நெகிழ, அலங்கோலமாக இருக்கக் கண்டு! போடாபோ! என்றேன். போரிடத் துணிந்தான், போக்கினேன் அந்தப் புள்ளின் உயிரை ! இரக்கம் காட்டினேனா ? இல்லை! சிறை அரசிளங்குமரி சீதையை அசோகவனத்திலே வைத்தேன். ராஜபோகத்தில் இருக்கவேண்டிய அந்த ரமணி யைக் காவலில் வைத்தேன். சேடியர் புடைசூழ நந்தவனத்திலே

108

107