பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா திறமை! நமது கம்பருக்கு, அந்த ரசவர்ணனையிலே அபாரத் நீதி : மாலைநேரப் பேச்சு, காலைவேலைக்கு உதவாது. இரா: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதிவீரர்கள், மற்றொருவருக்கு வணங்காமல், வாழ்ந்தனர். அதுபோலத்தான், நானும் வணங்காமுடியனாக வாழ்ந்துவந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம், வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். கம்: அந்த வாசகத்தைப்பற்றிய விவாதத்தை விட்டு விடலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் வணங்காமுடியன் என்ற பெயர் துரியோதனனுக்கும் உண்டு! ஆகவே இந்தச் சில்லறைக்குச் சிந்தனையைச் செலவிட வேண்டாம்; முக்கிய மான விஷயத்தைக் கவனிப்போம். ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கி,பரமனை வேண்டித் தவம் செய்துவந்த முனிபுங்கவர் களின் யாகயோகாதி காரியங்களை இலங்காதிபன், கெடுத்து நாசமாக்கி வந்தான். இப்பெருங் குற்றத்துக்கு என்ன பதில் கூறுவான்? இரா : தவம், ஆரியமுறை, அதை என் இனக் கலாசார முறைப்படி நான் ஆதரிக்க முடியாது, யாகம் என்பது ஜீவன்களை வதைத்து, பொருளைப் பாழாக்கி, மக்களை ஏய்க்கும் ஆரிய தந்திரம் என்பது. என் இனத்தின் சித்தாந்தம். ஆகவே என் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலே, ஆரியர் பிரவேசித்து, என் கலாசார விரோதமான காரியத்தைச் செய்து, அதன்மூலம் என் கட்டளையை மீறினதால், நான் யாகங்களை அழித்தேன். கம்: அதைத்தான் குற்றம் என்று கூறுகிறோம். இரா : அது எப்படிக் குற்றமாகும்? என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிக்கவும் எனக்கு, அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்வமேத யாகத்தையா அழித்தேன்? என் ஆளுகையிலிருந்த தண்ட காரண்யத்திலே தவசி வேடத்திலே புகுந்து என் தடை 'உத்தரவை மீறினவர்களை,யாக காரியங்கள் செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச் செய்தனர், அழித்தேன். உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக, அவனுடைய இராஜ்யத்தில், அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குல முறைக்குத் தகாது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய இராமன் ஆரிய பூமியில் ஆரிய

107

106