பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி: இலங்காதிபனே ! உன் கட்சியை எடுத்துக்கூற யாரை நியமித்திருக்கிறீர்? இரா : என்னையே நம்பி ஏற்றேன் இப்பணியையும்! கம்பரே! உமது கவிதையிலே, கொஞ்சம் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். [கம்பர் புன்னகை புரிகிறார்.j நீதி: உமது கட்சியை நீரே எடுத்துப் பேசப்போகிறீரா? இரா ; ஆமாம்! நான் போதும் அதற்கு என்று நம்புகிறேன். நீதி: வணங்காமுடியான் என்றோர் பெயர் உமக்குண்டா? கம்: பெயர் என்று கூறுவதைவிட, வசைமொழி என்பது பொருந்தும். இரா பொருத்தம் - பார்ப்பதானால், வணங்காமுடியான் என்று ஓர் பழிச்சொல் உண்டு என்று கூறலாம். நீதி: சொல் விளக்கத்துக்குள் நுழையவேண்டாம். அவ் விதம் அழைக்கப்பட்டதுண்டா? ஆமாம்! நீதி : ஏன்? இரா: நான் கேட்கவேண்டிய கேள்வி அல்லவா அது! கம்: எவருக்கும் வணங்கினதில்லை, மதிப்பதில்லை, அவ் வளவு மண்டைக் கர்வம் என்று பொருள்படும். இரா : பொருள்படும் என்று இழுப்பானேன் கம்பரே ! நீரே தான் சொல்லிவிடுமே, எனக்கு மண்டைக்கர்வம் என்று! நீதி: எவரையும் வணங்காத காரணம்? இரா : அவசியம் ஏ ததால்! நீதி: தக்க சமாதானமா அது? இரா: நான்மட்டுமா? எத்தனையோ மண்டலாதிபதிகள் வெற்றி வீரர்களாக இருக்கும்வரையிலே, வணங்காமுடி மன்னர் களாகத்தான் இருந்தனர். கம்: அவர்கள் கூடத், தமது இன்பவல்லிகளின் தாளிலே வீழ்ந்ததுண்டு,மஞ்சத்திலே.

106

105