உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜ: ஆத்திரம் கூடாது தம்பீ! நாமெல்லாம் மகாத்மா சிஷ்யருங்க..பொறுமை வேணும்......ஆத்திரம் கூடவே கூடாது. எதிர்க்கட்சிக்காரணுங்களோட பிரசாரத்தாலே, தீமை வரும்னு சொல்றே. சரி. அதுக்கு என்ன செய்யலாம்...

பீ: நாமும் கூட்டம் மகாநாடு, நடத்த வேணும்.

ஜ: இவ்வளவு தானே! செய்துட்டாப் போவுது....நாடகம் கூட நடத்தலாம்...

பீ: மகாநாடு, நாடகம், இது என்னவேலை செய்யுது தெரியுமா...பட்டிக்காட்டானுங்களெல்லாம்கூட இப்ப, பார்லிமெண்ட், பர்மிட், சட்டம், பத்திரிகை சுதந்திரம் இதை எல்லாம் தெரிந்துகொண்டு பேசறாங்க...

ஜ: ஆமாம்...பொதுவா, அறிவு வளருது...

பீ: என்ன...என்ன...அறிவு வளருதா! சரிதான் உங்களுக்கே மயக்கமா இருக்கு, அந்த ஆசாமிகள் பேச்சைக் கேட்டு...

ஐ: செச்சே...ஒரு பேச்சு முறைமைக்குச் சொன்னேன்...சரி, தம்பீ! மதுவிலக்கு கமிட்டிக் கூட்டம் போகணும்...இப்ப உன் ஏற்பாடு என்ன அதைச்சொல்லு...மகாநாடு நடத்தணும்...

பீ: ஆமாம்...

ஜ: நடத்தி விடலாம், தம்பீ! மகாநாடு நடத்தி, நாலாயிரம் ஐயாயிரம் பணம் கூட மிச்சப்படுத்தறாங்களாமே திராவிடக் கட்சிக்காரனுங்க. நாமும் ஒரு மகாநாடு நடத்தினா, ஆயிரம் இரண்டாயிரம் மிச்சமாகும்.....

பீ: யாருக்கு? நமக்கா! உலகம் தெரியாதவரா இருக்கிறேயேய்யா...அவனுங்களுக்கு மிச்சமாகுது—மகாநாடு நாடகம் எதிலேயும்—அதைப்போல நமக்கும் ஆகுமா....

ஜ: ஏன், தம்பீ, நாமும் பெரிய கொட்டா போட்டு, கொடி மரம் நட்டு நம்ப கோடிலிங்கம் நாயனக்கச்சேரி, கோகர்ணம் குப்பாயி பாட்டு, எல்லாம் ஜமாய்த்து விடலாம்—அட, ஒரு இரண்டாயிரம் மிச்சம் பிடிச்சா, நம்ம கமிட்டி ஆபீஸ் செலவுக்காவது ஆகும். ஒரு வருஷமா, வாடகை நான் கையைவிட்டுக் கொடுக்கறேன் தம்பீ!

பீ : தலைதலைன்னு அடிச்சிகிட்டு போகலாம்னு தோணுது, உங்கப் பேச்சைக் கேட்டு......ஐயா! ஆர அமர யோசித்துப் பேசுங்க. ஜனங்க, திராவிடத்தானுங்களோட சேர்ந்துவிட்டாங்க

126