பீ: கேள்வி சரி, ஆனால் நீங்கள் பேசுகிற தோரணை சரியில்லை. நான் வேலை வெட்டி இல்லாமலா வந்திருக்கிறேன்—அல்லது என் சொந்த இலாபத்துக்காகப் பாடுபடுகிறேனா.........
ஐ: இதென்ன தம்பீ, வீணான கோபம்......
பீ: வீண்தான்.......உங்களைப் போன்றவங்களுக்காக நாங்க மாரடித்துக்கொண்டு அழறது வீண் வேலைதான். எக்கேடாவது கெடட்டும் என்று விட்டுத்தொலைக்கவேண்டியதுதான்.........
ஜ: வெடுக்கு வெடுக்குன்னு பேசாதே, தம்பீ. இப்ப உன் பேச்சை நான் மதிக்கவில்லையா......
பீ: மதிச்சு......?
ஜ: இவ்வளவு நேரமா நீ சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு இருந்தேன்.
பீ: கேட்டு......? நிலைமை புரியுதா உங்களுக்கு. நெருப்பைக் கக்கறானுங்க, திராவிடத்தானுங்க.....புரியுதா......சன்னம் சன்னமாப் பேத்து எடுக்கறானுங்க, செல்வாக்கை........
ஜ: என்ன சொல்லு தம்பி, இந்தத் திராவிடத்தானுங்க நெருப்பைக் கக்கட்டும், விஷத்தையே கொட்டட்டும், நம்ம காங்கிரஸ் மகாசபையை அசைக்கக்கூட முடியாது.
பீ: அதுதான் தப்பு என்கிறேன், நிலைமை உங்களுக்குப் புரியவில்லைன்னு சொல்றேன். திராவிடத்தானுங்க கூட்டம், மகாநாடு, நாடகம், பாட்டுக் கச்சேரி, படக்காட்சி, இதிலே எல்லாம் கூட்டம் எப்படிக் கூடுது தெரியுமா உங்களுக்கு......
ஜ: கூட்டம் கூடிட்டா தீர்ந்துபோச்சா.......
பீ: கூட்டம் கூடினா என்னன்னு சொல்றிங்களா! பேஷ்! ரொம்ப நல்லாயிருக்கு உங்க மூளை.............
ஜ: தம்பீ! நல்ல வார்த்தையா பேசு......மூளை நல்லாயிருக்கா இல்லையான்னு எல்லாம் பேசாதே.....சரியில்லை.......என் வயசையாவது கவனிக்க வேணும் பாரு........நீ பெரிய மேதாவின்னே வைச்சிக்கோ........ஆவேசமாப் பேசறே.......விடாப்பிடியா வேலை செய்யறே........அதனாலேயே, அனுபவஸ்தர்களோட மனதைப் புண்படுத்தலாமா........
பீ: ஆத்திரத்திலே பேசிவிட்டேன்....மன்னிக்கணும்...
125