பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கன்னம் வைச்சிக்கிட்டே கா : இவனா ? பலே பக்கா! இருந்தான். கண்டுபிடிச்சு இழுத்துவர்ரேன். நிலவுகூட இருக் குது, பய, யாருமில்லாத வீடா பாத்து தோட்டத்துச் சுவற்றைத் தாண்டி உள்ளே போயி, கன்னம் வைக்கறான். ந: யாரு வீட்லே? கா: அந்த வேடிக்கையை ஏன் கேக்கறே போ. கள்ள பார்ட் குள்ளப்ப ஆச்சாரி இல்லே, அவன் வீட்டிலே கன்னம் வச்சான் பய. ந: பலே பேர்வழிதான். கள்ளபார்ட் குள்ளப்ப ஆச்சாரி. நூலேணி போட்டு ஏறுவது, கன்னம் வைக்கறது, சுவற்றைத் தாண்டறது இதெல்லாம் நாடகத்திலே செய்து காட்டினா, இவன் கள்ளபார்ட் வீட்டிலேயே கன்னம் வைச்சானா? கா : இந்த நிலாவிலே, அவங்கவங்க எவ்வளவோ தமாஷாப் பொழுது போக்கறாங்க. நம் தலை எழுத்தைப் பாரு. இந்தமாதிரிப் பயலைப் பிடிச்சி இழுத்துக்கிட்டுப் போறதா இருக்கு. வருகிற வழியிலே பூந்தோட்டத்திலே, என்ன அழகாகத்தான் இருக்கு தெரியுமா? ந: அதுவா ! இந்த நிலாக் காலம்னாலே, பூந்தோட்டத்துப் பக்கம் ஜோடி ஜோடியாக உலாவுமே. கா: ஆமாம்பா! (போகிறார்கள்) காட்சி 8 இடம் :-பூந்தோட்டம். இருப்போர்:-டாக்டர் சேகர், சுசீலா. (நிலவு அழகாகப் பிரகாசிக்கிறது. டாக்டரும் காட்சி என்ற சுசீலாவும் களிப்புடன் பாடுகின்றனர். துவக்கம் "வானில் உறைமதியே" பாட்டுடன் பாடல் முடிந்ததும், சில விநாடி மெளனம். பிறகு ......] சே: (சுசீலாவின் கூந்தலைக் கோதியபடி) சந்திரன் உதய மானவுடன், விரிந்த தாமரை குவிந்து விடுகிறதே. அது ஏன் சொல் பார்ப்போம். 2

9

9