பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சு : ஏன்? சே: கதிரவனைக் கண்டதும் அல்லவா? சு: ஆமாம். கமலம் களிப்படைகிறது சே: அதுபோலவே, சந்திரனைக் கண்டதும், பத்மாவதிக்கு வெட்கம் உண்டாகிறது. சு:

9

சே : யாரவள், பத்மாவதி? தாமரை! பத்மம் என்றால் தாமரைதானே. சு: அதுவா? ஆமாம், ஏன் தாமரைக்கு வெட்கம் உண்டா கிறது? சே: என்ன கேள்விபோ! ஒரு ஆடவனும் அவன் ஆருயிர்க் காதலியும் சரசமாடுவதை வேறோர் பெண் காண நேரிட்டால், வெட்கித் தலைகுனிந்து கண்களை மூடிக்கொள்ள மாட்டாளா? சு: ஆமாம்! சே: அதே போலத்தான். சந்திரன் எனும் மணாளன், அல்லிப் பூவாகிய தன் மனையாளுடன் விளையாட ஆரம்பிக் கிறான். சந்திரன் உதித்ததும் அல்லி மலருகிறதல்லவா? காதல் விளையாட்டுதானே அது. அல்லியும் சந்திரனும் இப்படிச் சரசமாடுவதைக் கண்டதும் பத்மாவுக்கு வெட்கம்; மூடிக்கொள்கிறாள். சு : சேகர்! எவ்வளவு இன்பமயம் இன்று. சே : கண்களை சுசீலா! நீலநிற வானத்திலே நீந்தி விளையாடும் அந்த நிலா எவ்வளவு அழகு பார் கண்ணே! சு : சுந்தரமான சந்திரனைப் பிடித்துக் கொள்ளத் தாவிவரும் அந்தக் கருப்பியைப் பார் கண்ணாளா? சே: மேகம், என்ன முயற்சித்தாலும், சந்திரன், அதனை விரட்டி அடித்துவிட்டு, வெற்றியுடன் பிரகாசிப்பான் சுசீலா! நமது காதலும் எப்படிப்பட்ட இடையூறு நேரிட்டாலும் அவற்றைத் தாண்டி வெற்றிபெறும் அல்லவா? சு: நான் பதில் சொல்லவா? சே: மொழிக்கு முன்பே, விழி பேசிவிட்டதே கண்ணே!

10.

10