பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

', கண்ணாளா! இன்றிரவு நாம் கவலை தரும் பேச்சே பேசக் இந்த நிலவு, காதலுக்கு, கவிதைக்கு ஏற்பட்டது...... (ஓடிவிளையாடுகிறாள்.) சு: கூடாது. சே : (ஓடிச்சென்று அவளைப் பிடித்துத் தன்மேல் சாய்த்துக் கொண்டு) இந்தப் பால்வண்ண நில்விலே, ஒரு ஆற்றோரத்தில் வெண்மணலிலே, நீயும் நானும்... சு நான் வீணை வாசிக்கவேண்டுமா? சே: பேசினால் போதும் கண்ணே ! வீணை எதற்கு!

நிலவு,உமக்கு, கவிதா சக்தியைத் தருகிறானே. ஆமாம்! அவன் எதுவும் செய்வான். மகா துஷ்டனல்லவா அவன். சே: ஏன்? நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறான்? எல்லோருக்கும் இன்பரசம் தருகிறானே! சு. அப்படியும் சொல்லிவிட முடியாது. பிரிந்திருக்கும் காதலருக்கு, நிலவு நெருப்பாக அல்லவா இருக்கும். மேலும், இந்தச் சந்திரன், மகா காமுகன். சே: ஓஹோ ! நீ அவனுடைய பால லீலையைச் சொல் கிறாயா? அவன்மீது என்ன குற்றம் சுசீலா? அவன் பாடம் படிக்கத்தான் போனான். அவள் அல்லவா அவனைக் கெடுத்தாள். சு: யாரைச் சொல்கிறீர்? சே: ஏன், குருபத்தினி தாரையைத்தான். ஏன்? புராணம் தானே, புளுகுதானே என்று கூறுகிறாயா ? சு அது மட்டும் இல்லை. அந்தக்கதையை யாரோ ஆடவர் எழுதியதால், தாரைதான் சந்திரனைக் கெடுத்தாள் என்று பழி சுமத்திவிட்டான். ஒரு பெண் எழுதியிருந்தால் தெரிந்திருக்கும், உங்கள் சந்திரனின் யோக்யதை. சே: ஏது,சுசீலா! மாதர் குலத்தின் விடுதலைக்கே தலைமை வகித்துப் போரிடுவாய் போலிருக்கிறதே. 7: பொதுவாகவே ஒன்று கேட்கிறேன், உண்மையைக் கூறவேண்டும். ஆண்கள் பெண்களை மயக்குகிறார்களா, பெண்கள் ஆண்களை மயக்குகிறார்களா? சே: நல்ல கேள்வி கேட்டுவிட்டாய் சுசீலா? வீராதி வீரனும், பெண்ணின் பிரேமைக்குப் பலியாகிறான். இதிலுமா சந்தேகம்,மாதரின் இரு விழியும், மதுக்குடங்களல்லவா?

11

11