பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு: ஓஹோ! ஆண்கள் மட்டும் மகா யோக்கியர்களா? பேதைப் பெண்ணிடம் அன்பாகப் பேசி, "மாதே! உன்னை நான் உயிராகக் கருதுகிறேன். நீயே என் இன்பம். என் இருதய கீதம். உனக்காக நான் எதுவும் செய்வேன். வேறோர் மாதைக் கண்ணெடுத்தும் பாரேன். இதை நம்பு. இது சத்யம். (ஆண்கள் பேசும் பாவனையிலேயே கேலியாகப் பேசிக் காட்டிவிட்டு) என்று பேசி, பெண் தன் மனதைப் பறிகொடுத்துவிட்ட பிறகு..... நாம் கயவன் அல்லவா, கண்ணே! காதலித்தவளைக் கைவிடுவான். போதும், நமக்கு ஏன் அந்தப் பேச்சு. இப்படிப் பேசிக்கொண்டிருப்பது கண்டு, சந்திரன் கோபிக்கிறான். என்ன இது ! இவ்வளவு தாராளமாக நான் ஆனந்தத்தை அள்ளி அள்ளி வீசுகிறேன், வெள்ளியை உருக்கி வார்க்கிறேன், இவ்வளவும் எதற்கு? என்று கேட்பான். சு: எதற்கு? சே: எதற்கா? இதோ இதற்குத்தான். (தழுவிக்கொண்டு முத்தமிடப் போகையில், சிறுவர்கள் ஓடிவருகிறார்கள் நிலாப் பாட்டு பாடிக்கொண்டு. சேகரும் சுசீலாவும் விலக் நின்றுகொண்டு குழந்தைகளை அழைத்து விளையாடுகிறார்கள். சே: யார் தம்பி! நீங்களெல்லாம்? சிறு : பசங்க. ஏன்,மாமா, தெரியலையா உனக்கு. சு: அப்படி! அப்படிக் கொடுங்கள் சாட்டை. ஏன் இவர் களைப் பார்த்தாத் தெரியவில்லையா,குழந்தைகள் என்று. சே: குறும்பு சுசீலா! உனக்கு. குழந்தைகளே! நீங்கள் எங்கே இருப்பது? சிறு : ங்களா? அடுத்த வீதியிலே இருக்கே பெரிய பள்ளிக்கூடம், அங்கே இருப்பது. நிலாவிலே விளையாட வந் தோம். மாமா! ஒரு கதை சொல்லேன். சு: கேளுங்க கேளுங்க, மாமாவுக்கு நல்ல நல்ல கதை தெரியும். சே: தம்பி! எனக்குக் கதை தெரியாதே. ஒரே ஒரு கதை தெரியும். ஒரு பெண் ஒரு ஆணை மயக்கிய கதை, சொல்லட்டுமா? (சுசீலாவைப் பார்த்தபடி).

12

12