உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ச: சரி, அப்படியே இருக்கட்டும்—காங்கிரஸ் மகாசபையோட செல்வாக்கைப் பலப்படச் செய்யறது எதுக்கு...அதுவும் எலக்க்ஷனுக்குத்தானே...இல்லையானா, வெள்ளைக்காரனை ஓட்ட வேணுமோ.......இல்லையே, அவா போயிட்டா.....! இப்ப, காங்கிரசுக்கு அந்த வேலை இல்லை...ஆகவே காங்கிரசோட பலம் எதற்கு பயன்படப்போறது? எலக்க்ஷனுக்கு....அதனாலேதான் சொல்றேன், அடுத்த எலக்க்ஷனிலே, யாரார் எம். எல். ஏ.வுக்கு நிற்கப்போறவான்னு கண்டுபிடிச்சு.....

ஜ: பீமராவுக்கு எப்படித் தெரியும்' அந்த இரகசியம். சாமி! போன எலக்க்ஷனிலே, இந்த பீரங்கியும் மத்தவாளும், யாரோ தேசத் தொண்டராம் தாண்டவராயப்பிள்ளை.......

ச: ஆமாம், கொடிப்போர் தாண்டவராயன்னு சொல்லுவா.....அதாவது, ஊரிலே உயரமா இருக்கிற மரம், கோபுரம், ஒண்ணு பாக்கி விடாமல், தேசியக் கொடியைக் கட்டிவைக்கறது அவன் வேலை. பாபம், பல தடவை, அடி உதை.....

பீ: மண்டையைக்கூட உடைத்திருக்கா......

ச: யார் தெரியுமா.....? உம்ம சம்மந்தி, ஆப்காரி காண்ட்ராக்டர் ஆறுமுகம் பிள்ளையோட தம்பி......

ஐ: சொன்னாங்க.....இவன் அவங்க புதுசா கட்டின பிள்ளையார் கோயில் கோபுரத்திலே கொடி கட்டப் போனானாம்......கேள்விப்பட்டிருக்கேன்.....அந்தத் தாண்டவராயனைத்தான் எலக்க்ஷனுக்கு நிற்க வைக்கவேணும்னு ததிங்கிணத்தோம் போட்டாங்க.....கடைசியிலே இவங்க தலைவர், இங்கே வந்தார். நான் முடியாதுன்னு சொல்ல வாய் எடுத்தேன்......இப்ப சொல்றேன், சாமி! நிஜத்தை, ஒரு மந்திரி வேலை கூடத் தருவதாகச் சொன்னாங்க.....அதனாலே, அடுத்த எலக்க்ஷனிலேயும், யாராரை நிற்க வைப்பாங்க என்கிற விஷயம், பீமராவுக்கு என்ன தெரியும்......

பீ: சரி...உங்களுடைய போக்கு எனக்கு நன்றா புரிந்துப் போச்சி......நான் என்ன செய்யவேணுமோ அதைச் செய்து கொள்கிறேன்.......

[போக முயல்கிறார்]

ச: பீமராவ்! உட்காருமய்யா, உட்காரும்.......மகாநாடு ஏற்பாடானதும், நன்கொடை புத்தகம் எடுத்து வா, நானே கிட்ட இருந்து, பணம் வாங்கித் தருகிறேன்—இவரிடம் மட்டுமல்ல, இன்னும் எனக்குத் தெரிந்த மத்தவாளிடமெல்லாம்......

136