உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ச: சாட்சாத் சிவபெருமானுக்கு நெற்றிக்கண்ணே கிடையாதுன்னு சாதிக்கிற, சண்டாளக் கூட்டம் எம். எல். ஏ.வைச் சூடு சொரணையற்ற ஜென்மம் என்று ஏசி எழுதுவது, என்ன ஆச்சரியம்,வனிதா?......

வ: எம்.எல்.ஏ.க்களைச் சூடு சொரணையற்ற ஜென்மங்கள் என்றும், மந்திரிகள் சுறுசுறுப்பு அற்றவர்கள், அதாவது சோம்பேறிகள் என்றும் எழுதியிருப்பது, சூனாமானா என்று எண்ணிக்கொண்டு, பேசுகிறீர்கள்.

பீ: வேறே, யார் எழுதினது?

வ: (ஏட்டை அவர் எதிரே வீசி) யாரா? உங்க, காண்டீபம் காங்கிரசைத் தாங்கிக் கொண்டிருக்கே அதே ஏடு. சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம். எல். ஏ.-க்கள் என்று எழுதியிருக்கு 8—6—'51-ல். இதுவா கட்சியை வளர்க்கிற இலட்சணம்.

ஜ: (பதறி) காங்கிரஸ் பத்திரிகையா இப்படி எழுதுது—எங்களைக் குறித்து......

[பீமராவ் புன்னகையுடன் பத்திரிகையைப் பார்க்கிறார்]

ச: (சோகமாக) சோம்பேறி மந்திரிகள்! சொரணைகெட்ட எம். எல். ஏ.-க்கள்!! அட அடா! எவ்வளவு கேவலமான நிந்தனை......இவ்வளவு கேவலமாக சூனாமானாக்கள் கூடப் பேசுவதில்லை.

வ: ஆமாம்—அவர்கள் சில சமயம் இந்த மந்திரி சபையே திராவிடர்களுடையதுதான், மந்திரிகள் மீதும் தவறு கிடையாது, எம். எல். ஏ.-க்கள் மீதும் தவறு கிடையாது—இவர்களுடைய அதிகாரத்தை எல்லாம், டில்லி எடுத்துக்கொண்டுவிட்டதாலே, இவர்களாலே ஏதும் செய்யமுடியவில்லை என்று பேசுகிறார்கள், காங்கிரசை ஆதரிக்கும் 'காண்டீபம்' சோம்பேறி மந்திரிகள்—சொரணை கெட்ட எம். எல். ஏ.-க்கள் என்று எழுதுகிறது—இதை ஆதரிக்கவேண்டும் என்று காங்கிரசின் பெயரைக் கூறிக் கொண்டு, பீமராவுகள் பேசுகிறார்கள்......

ஜ: தெரியுதாய்யா யோக்யதை! என்னமோ, எங்களை, திராவிடத்தானுங்க, திட்டு திட்டுன்னு திட்டறாங்க, எங்கிட்ட பணம் கொடு. நான் மகாநாடு கூட்டி, அந்தத் திட்டைத் துடைச்சிப் போடறேன்னு பேசினயே, இதுக்கு என்ன

139