உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்றே? காண்டீபம் கண்டபடி ஏசுதே! சூடு இல்லை சொரணை இல்லை, எங்களுக்கு......காசு இருக்கேல்லோ, அதைக் கொடு!.....எப்படி,சாமி! ஏற்பாடு!

ச: காண்டீபம் இப்படித் திட்டுகிறபோது, திராவிடா திட்டுவதிலே கோபப்படக் காரணமே இல்லே......

ஐ: அதைப்போயி தடுக்க வேணும், ஆயிரம்கொடு, ஐந்நூறு கொடுன்னு கேட்க வந்துவிட்டாரே இந்த ராவு நாயுடு......

[எம்.எல். ஏ. தம்பி தர்மலிங்கம் வருகிறார். சிறிதளவு கவலையுடன் வெளியே இருந்து உள்ளே, சிறு மந்திராலோசனைக் கூட்டம்போல இருக்கக்கண்டு யோசிக்கிறார்.]

ஜ: என்ன தம்பீ! ஏன் முடியலையா, போன காரியம்.........

த: (ஆயாசமாக உட்கார்ந்து) வனிதா! ஐஸ்வாடர் கொடு—என்ன கேட்டிங்க......போன காரியமா? அது ஒரு வகையாக முடிஞ்சுது......(பீமாராவைக் காட்டி) இவர் என்ன வேலையா.....

ஜ: கட்சி சமாசாரம் பேச வந்தாரு—பரவாயில்லை.....அவர் நம்ம சினேகிதருதான்.........

த: எல்லாரும் சினேகிதருதான்—சினேகிதராலே, ஆபத்து வருகிற காலமாக அல்லவா இருக்குது இப்ப.......

ஜ: என்ன தம்பீ, என்னென்னமோ பேசறே.......

த: பீமராவ் ஒண்ணும் சொல்லவே யில்லையா உங்களிடம்?

ஜ: எதைக் குறித்து?

[வனிதா கொண்டு வந்த ஐஸ் வாடரைச் சாப்பிட்டு விட்டு, கட்கத்திலிருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்து, அதற்குள் இருந்த ஒரு பழைய பத்திரிகைப் பிரதியை எடுத்துப் பிரிக்கிறார்.]

த: இதைப் பார்க்கவில்லை போலிருக்கு....

ஐ: எதை?

த: நம்ம தலைக்குத் தீம்பு தேடுது இந்த ஏடு.

[மெல்லிய குரலில் படிக்கிறார்.]

140