ஊழி: அப்படியா...அடே...அவரா...?
காம: ஆமா! பேப்பரிலே பார்க்கலையா? இப்ப, சொல்லய்யா, அவர் எங்க 'ஆளு'ன்னு அவங்கப் பேசிக்கொள்றதிலே, அர்த்தம் ஏதாச்சும் இருக்கா...
ஊழி: ஆமா...எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்..?
காம: கல்வி இலாகாவிலே, சுந்தரவடிவேலு இருக்காரேல்லோ...
ஊழி: ஆமாம்...அவரு முழுக்க முழுக்க அவங்க ஆளாம்...
காம: யாரு சொல்றது? அவங்கதானே......! பைத்யக்காரத்தனமா, நீயும் நம்பறயா? இதோ பாரய்யா. இராஜகோபாலாச்சாரி ஆட்சியின்போது, இந்த ஆசாமி, கல்வி இலாகாவிலேதான் பெரிய வேலையிலே இருந்தாரு......அப்ப கல்வித் திட்டம் வந்துதேல்லோ.....
ஊழி: நாமெல்லாம்கூட எதிர்த்தமே...
காம: ஆமாய்யா...பெரியார் கட்சியும் பலமாகத்தானே எதிர்த்துது...மறியல் நடத்தல்லே...
ஊழி: ஆமாம்...அடே அப்பா, ஊரையே ஒரு கலக்கு கலக்கி விட்டாங்களே...
காம: கலக்கினாங்களேல்லோ.....அப்ப, இதே சுந்தரவடிவேலுதான், ஊரூருக்குப் போயி ஆச்சாரியாரோட கல்வித்திட்டம் சிலாக்யமானது, அதை எதிர்க்கிறவங்க விவரம் தெரியாதவங்கன்னு பேசினவரு...தெரிஞ்சுக்கோ...
ஊழி: இவரா...ஆச்சாரியாரையா ஆதரிச்சாரு...
காம: ஆதரிக்காமே, என்ன பண்ணுவாரு? ஏன்யா, உத்யோகஸ்தரையெல்லாம், உன் ஆளு என் ஆளுன்னு கட்சிகள் பேசிக் கொள்ளலாமே தவிர. அவங்க எப்பவும் 'எஜமான் சொல்படி'தானே...
ஊழி: அப்படித்தான் இருக்குது...
காம: இப்படிப்பட்டவங்களுக்கு உத்யோகம் கொடுத்து விட்டதிலே, நமக்கென்னய்யா நஷ்டம்....அதனாலே என்ன முறை, தலைகீழாக மாறிப் போச்சு? என்ன திட்டம் வந்து நம்மைக் குத்துது, குடையுது.....பெரியவரு, என்னை தற்குறி, தன்மானமத்தவன், கங்காணி, அப்படி இப்படின்னு ஏசிப்பேசி வந்தாரு...
154